வெளியானது காலா படத்தின் டீசர் வெளியீட்டு தேதி – ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

0
186

கபாலி படத்தைத் தொடர்ந்து 2வது முறையாக பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் காலா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். ரஞ்சித்தின் படங்களில் மிக வேகமாக படப்பிடிப்பு செய்யப்பட்டு முடிக்கப்பட்ட படமாக காலா அமைந்துள்ளது. மும்பையை சுற்றி நகரும், இப்படத்தின் கதையில் ரஜினி டான் ஆக நடித்துள்ளாராம்.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், வத்திக்குச்சி திலீபன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ‘காலா’ இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவாதகவும் விரைவில் சென்சாருக்கு அனுப்பப்படும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

இந்த நிலையில் தற்போது காலா திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதி பற்றிய ஒரு தகவல் கசிந்துள்ளது.இந்த படத்தின் டீசரானது அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை.விரைவில் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பார் எனத்தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here