இன்றைய ராசி பலன் 26-03-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார்??

0
258

இனிய வணக்கங்கள். இன்றைய திங்கள் கிழமை நல்ல நாளில், நல்லதொரு பங்குனி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trend news மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

உங்கள் செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

ரிஷபம்:

சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

மிதுனம்:

கடந்த கால உழைப்பிற்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறுக்கிட்டாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.

கடகம்:

பெற்றோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். லாபம் சுமாராக இருக்கும். திட்டமிட்ட விஷயத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள்.

சிம்மம்:

அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

கன்னி:

குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி நிலையை கண்டு பிறர் வியப்படைவர். தாராள பணவரவு கிடைக்கும்.இயன்ற அளவில் தானதர்மம் செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்:

திட்டமிட்ட செயல்கள் விரைவில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

விருச்சிகம்:

உறவினர்கள் உதவி கேட்டு தொல்லைப்படுத்துவர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும்.வருமானம் சீராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

தனுசு:

மதிநுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரம் செழித்து சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மகரம்:

செய்த நற்செயலுக்கான நன்மை தேடி வரும். தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவீர்கள். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். அக்கம் பக்கத்தினருடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும்.

கும்பம்:

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். ஆரோக்கியம் பலம் பெறும்.

மீனம்:

எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். செயல்களில் நிதானத்தை பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here