(சித்திரை 1) தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் வெளியானது – புது வருடத்தில் இந்த 4 ராசிக்கு பெருநஷ்டம் ஏற்பட போகின்றதாம்

0
1346

இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.14/04/2018 சனிக்கிழமை காலை 07:00 மணிக்கு உத்திரட்டாதி 1ஆம் பாதத்தில் பிறக்கின்றது.

புண்ணிய காலம் – 14/04/2018 அதிகாலை 03:00 மணி முதல் காலை 11:00 மணி வரையாகும்.ஆடை நிறங்கள் – சிவப்பு அல்லது சிவப்பு கறுப்பு நிறங்கள்

கைவிசேட நேரம்: 

14/04/2018 சனிக்கிழமை பகல் 12:15 மணி முதல் – 02:10 மணி வரை

14/04/2018 இரவு 06:21 மணி முதல் – 08:13 மணி வரை

16/04/2018 திங்கட்கிழமை பகல் 12:30 மணி முதல் – 02:02 மணி வரை

16/04/2018 இரவு 06:13 மணி முதல் – 07:24 மணி வரை

நட்சத்திர பலன்கள்

மேடம், விருச்சிகம் – பெருநஷ்டம்

மகரம், கும்பம் – நஷ்டம்

சிம்மம், தனுசு, மீனம் – சமபலன்

இடபம், துலாம், கடகம் – லாபம்

மிதுனம், கன்னி – அதிகலாபம்

மேலும் எந்தெந்த ராசிக்கு பெரும் நஷ்டம்  

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும்,  ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள்.

மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிறக்கும் புதிய வருடத்தில் (14/04/2018) இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் பெருநஷ்டம்  ஏற்பட போகின்றதாம். கொஞ்சம் எச்சரிக்கையுடன்  இருக்கவும்.

மேஷம்

இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகப்பெரிய இலட்சியவாதிகளாக இருப்பார்கள். தங்கள் தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மூழ்கியிருப்பார்கள். பிறக்கும் புதிய வருடத்தில் பெருநஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் அவதாகமாக செயற்படுமாறு வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருச்சிகம்

இவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அதனை வெளியே வெளிப்படுத்த மாட்டார்கள். ஆன்மீகத்திலும் நாட்டம் உடையவராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களும் உஷாராக இருக்க வேண்டும். பிறக்கும் புதிய வருடத்தில் பெருநஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

மகரம்

இந்த ராசிக்காரர்களும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு சில தவறுவளினால் புதிய வருட ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நீங்களும் உஷாராக இருக்க வேண்டும்.

கும்பம்

தண்ணீர் குடத்தை அடையாளமாக கொண்ட கும்ப ராசிக்கார்கள் துணிச்சலானவர்கள். ஆனால் இந்த புது வருட ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. எல்லா விடயங்களிலும் கவனம் தேவை.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here