இன்றைய ராசி பலன் 04-04-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார்??

0
685

இனிய வணக்கங்கள். இன்றைய புதன்கிழமை நல்ல நாளில், நல்லதொரு பங்குனி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trend news மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது அவசியம். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைத் திறம்பட சமாளிப்பர். வாகன வகையில் திடீர் செலவு ஏற்படலாம்.

ரிஷபம்:

யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நண்பரின் வழிகாட்டுதல் நன்மையளிக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். உடல்நலனில் அக்கறை தேவை.

மிதுனம்:

திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பிறரிடம் சொல்ல வேண்டாம். தாராள பணச்செலவில் குடும்ப தேவை நிறைவேறும். மனைவியால் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கடகம்:

அக்கம்பக்கத்தினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணவரவு திருப்தியளிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் கல்வி, வேலைவாயப்பில் சிறந்து விளங்குவர்.

சிம்மம்:

உங்கள் பேச்சு செயலில் முரண்பாடு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் முயற்சி தேவை.

கன்னி:

அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேச வேண்டாம். தொழிலில் உருவாகிற சிரமங்களை சரிசெய்வது அவசியம். லாபம் சுமார். பணியாளர்கள் முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். உடல்நிலை அதிருப்தியளிக்கலாம்.

துலாம்:

வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு உருவாகும். கடந்த கால உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் அபரிமிதமான அளவில் வளர்ச்சி பெறும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.

விருச்சிகம்:

மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறப்பாக இருக்கும். அமோக ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக பயணம் செல்வர். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவர்.

தனுசு:

நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழிலில் அதிக உழைப்பினால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்களுக்கு குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும்.

மகரம்:

குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சுயலாபத்திற்காக சிலர் உதவ முன்வரலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.லாபம் சுமாராக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கும்பம்:

தாமதமாகிய பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டி குறையும். அதிக பணவரவு கிடைக்கும். பிள்ளைகளின் செயல் மனதை மகிழ்விக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

மீனம்:

வாழ்க்கைத் தரம் வியத்தகு அளவில் உயரும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்ததை விட ஆதாயம் கூடும். சேமிப்பு உயரும். பெண்களால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here