இன்றைய ராசி பலன் 05-04-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார்??

0
804

இனிய வணக்கங்கள். இன்றைய வியாழக்கிழமை நல்ல நாளில், நல்லதொரு பங்குனி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trend news மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

அவசரப்பணி ஏற்பட வாய்ப்புண்டு. அக்கம் பக்கத்தினருடன் நெருக்கம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும்.வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

ரிஷபம்:

எதிர்மறையாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்:

மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். எதிலும், சமயோசிதமாக செயல்பட்டு வருவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து மனதில் நம்பிக்கை வளரும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தின் முக்கிய தேவையை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்:

உங்கள் மீது பலரும் நல்லெண்ணம் கொள்வர். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவான குறுக்கீடு விலகும். ஆதாயம் உயரும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்:

நேர்மை வழியில் நடை போடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற குறையை சரி செய்வது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

கன்னி:

சிலர் உங்களின் நற்செயலை பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி உருவாகும். லாபம் சுமார். பெண்களுக்கு தாய்வழி உறவினரால் உதவி கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

துலாம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும் யோகம் உண்டு.

விருச்சிகம்:

திட்டமிட்ட பணி விரைவாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வருமானம் எதிர்பார்த்ததை விட அமோகமாக இருக்கும். உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை அளிக்கும்.

தனுசு:

திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். வாகனப் பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் உயரும். தாய் வழி உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவர்.

மகரம்:

எவரிடமும் குடும்ப பிரச்னையைப் பேச வேண்டாம். தொழிலில் விற்பனை சுமாராக இருக்கும். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக பயணம் மேற்கொள்வர். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

கும்பம்:

உங்களால் பலன் பெற்று நன்றி மறந்தவரையும் மன்னிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பூர்வீகச் சொத்து மூலம் திடீர் வருமானம் கிடைக்கும்.

மீனம்:

பேச்சு, செயலில் வசீகரம் மேலோங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். சேமிக்க வாய்ப்புண்டு. பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பரிசு, பாராட்டைப் பெறுவர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here