இன்றைய ராசி பலன் 07-04-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார்??

0
729

இனிய வணக்கங்கள். இன்றைய சனிக்கிழமை நல்ல நாளில், நல்லதொரு பங்குனி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trend news மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர்.

ரிஷபம்:

அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். பெண்கள் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பர். நண்பரால் உதவி உண்டு.

மிதுனம்:

மனதில் உற்சாகம் மிகுந்திருக்கும். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி மறையும். வருமானம் அதிகரிக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கடகம்:

மனதில் சந்தோஷம் குடியிருக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரமாகச் செலவழிப்பர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

சிம்மம்:

பேச்சு, செயலில் வசீகரம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் தாராளமாக இருப்பர். உடல்நலனில் ஆர்வம் உண்டாகும். உறவினரால் உதவி உண்டாகும்.

கன்னி:

குடும்பத்தினர் பெருமைப்படும் விதத்தில் செயல்படுவீர்கள். நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு பெருகும். ஆரோக்கியம் பலம் பெறும்.

துலாம்:

நண்பர் விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் உயரும். பெண்கள் சிக்கனம் மூலம் சேமிக்க முயல்வர். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும்.

விருச்சிகம்:

செயல்களில் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.

தனுசு:

மனக்குழப்பம் உண்டாகி மறையும். தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம். பெற்றோரின் ஆலோசனை ஏற்பது நன்மையளிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். உடல்நலனில் அக்கறை செலுத்தவும்.

மகரம்:

லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

கும்பம்:

உலக நடப்புகளை அறிவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

மீனம்:

மாறுபட்ட கருத்து கொண்டவர்களிடம் விலகுவது நல்லது. நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராகத் திகழ்வர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here