இன்றைய ராசி பலன் 09-04-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார்??

0
862

இனிய வணக்கங்கள். இன்றைய திங்கள் கிழமை நல்ல நாளில், நல்லதொரு பங்குனி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trend news மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

குடும்ப விஷயம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். உடல்நலனில் அக்கறை தேவை.

ரிஷபம்:

உங்களின் நற்செயலை சிலர் தவறாக விமர்சிப்பர். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமார். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். மனைவியின் ஆலோசனை நிம்மதிக்கு வழிவகுக்கும்.

மிதுனம்:

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கடகம்:

கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் தாராளமாக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

சிம்மம் :
குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக திடீர் பயணம் செல்ல நேரிடும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.


கன்னி
:

மற்றவர் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

துலாம்:

முக்கிய பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி விலகும். லாபம் உயரும். பிள்ளைகளின் வழியில் சுபச் செலவு செய்து மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

இடையூறு செய்பவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படலாம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றுவது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

தனுசு:

கடந்தகால நற்செயலுக்கு உரிய பலன் தேடி வரும். எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினரால் உதவி உண்டு.

மகரம்:

உறவினர்களுடன் இணக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும். பெண்கள் வீட்டுச் செலவில் தாராள எண்ணத்துடன் செயல்படுவர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

கும்பம்:

இடையூறாக செயல்பட்டவர் விலகிச் செல்வர். தொழில், வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் நிலுவைப்பணிகளை விரைந்து முடிப்பர். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம் :
நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு முன்னேற்றம் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் வரும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமையளிக்கும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here