இன்றைய ராசி பலன் 10-04-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார்??

0
614

இனிய வணக்கங்கள். இன்றைய செவ்வாய்கிழமை நல்ல நாளில், நல்லதொரு பங்குனி நாளில் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள் மற்றும் பரிகாரங்கள் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், ராசியான நிறங்கள் மற்றும் எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை நாம் tamil trend news மூலமாக தினமும் தெரிந்துகொள்ள போகிறோம், எப்போதும் இணைந்திருப்போம், தங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் கம்மேண்டில் தெரிவிக்கவும். கடவுளின் ஆசியால் அனைவருக்கும் நன்மையான நாளாகவே அமைய வேண்டிக்கொள்கிறோம்.

மேஷம்:

பேச்சிலும், செயலிலும் திறமை வெளிப்படும். எதிரி இடம்மாறி போகிற சூழல் உருவாகும். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும்.மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள்.

ரிஷபம்:

மனதில் இனம் புரியாத தயக்கம் உருவாகி மறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவை தவிர்க்கவும்.

மிதுனம்:

பேச்சில் நிதானம் பின்பற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம் கவனம். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் வீட்டுச் செலவுக்கு சேமிப்பை கரைப்பர். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

கடகம்:

பொதுநல நோக்குடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் தோழியருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவர்.

சிம்மம்:

சுய நலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டி வருவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு விலகும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்களுக்கு இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும்.

கன்னி:

உங்களின் நியாயமான பேச்சை சிலர் ஏற்க தயங்குவர். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் இரவலாக நகை, பணம் கொடுக்க வாங்க வேண்டாம்.

துலாம்:

திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். பபணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் வருமானம் சீராக இருக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்:

பேச்சு, செயலில் நேர்மை நிறைந்திருக்கும். தெய்வ அருள் பலம் துணை நிற்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் உதவி உண்டு.

தனுசு:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக பயணம் மேற்கொள்வர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. சுபவிஷயத்தில் தாமதம் உண்டாகும்.

மகரம்:

வாழ்வில் இனிய அனுபவம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். நண்பருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்:

குடும்பத்தினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை.

மீனம்:

வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here