இந்த விளம்பி வருடத்தில் சிக்கலில் சிக்கப்போவது இந்த ராசிக்காரர்கள்தான் !! உங்க ராசியான்னு பாருங்க !!

0
4289

விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், வினோதப் போக்கும் கொண்ட நீங்கள், நாலும் அறிந்தவர்கள். தன்மானம் அதிகமுள்ள நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பவர்கள். விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள மாட்டீர்கள்.

சூரியன் வலுவாக 6ம் வீட்டில் நிற்கும் போது இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் ஆரவாரமில்லாமல் அமைதியாக சாதிப்பீர்கள். மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் நீங்கள் முடித்துக் காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

பணப் புழக்கம் அதிகரிக்கும். எங்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும்.

உங்களுக்கு 5வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள்.

மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு உடனே திருமணம் முடியும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லி ஏமாந்தீர்களே! இனி யாரிடத்தில் என்ன பேச வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 03.10.2018 வரை குருபகவான் ராசிக்கு 12ல் மறைவதால் திடீர் பயணங்கள் மற்றும் திடீர் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணியதலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். 04.10.2018 முதல் 12.03.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்தமர்வதால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாட்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும்.

உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்து செல்லும்.

நேரம் கடந்து சாப்பிடுவதை தவிர்க்கப்பாருங்கள். அல்சர் வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன்மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால் அதுமுதல் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவும் உண்டு. ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும்.

பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்கு குழந்தைபாக்யம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். 30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 3ம் வீட்டில் நிற்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள்.

நிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வருடம் பிறக்கும் முதல் 12.02.2019 வரை ராகு 9ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். கேது 3ல் நிற்பதால் சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை ராகு 8ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். அலர்ஜி வந்து நீங்கும். சொந்த பந்தங்களின் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டு பேசாதீர்கள். கேது 2ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும். நல்லதை எடுத்துச் சொல்லப்போய் சில சமயங்களில் மனக்கசப்பில் போய் முடியும்.

இந்த ஆண்டு முழுக்க சனி 2ல் அமர்ந்து ஏழரைச்சனியின் ஒருபகுதியான பாதச்சனியாக இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுங்கள். கண், காது வலி வந்து செல்லும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உடம்பில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் ரகசியமாக வைப்பது நல்லது.

கன்னிப்பெண்களே! பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்தவரையே மணம் முடிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வேற்றுமதத்தைத் சேர்ந்தவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

மாணவ, மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த கல்விப் பிரிவில் போராடி சேர்வீர்கள். சிலர் நன்கொடை கொடுத்து சேரும் சூழ்நிலை வரும். சிலர் வெளியூர் அல்லது வெளிமாநிலத்தில் தங்கி படிக்க வேண்டி வரும்.

வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தைக் கண்டறிவீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சித்திரை மற்றும் தை மாதத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். ஆவணி மாதத்தில் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். புது வேலையாட்கள் அமைவார்கள். ஏற்றுமதி,இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.

உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். ஏழரைச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புது வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை ஓரங்கட்ட நினைத்த உயரதிகாரியின் தந்திரத்தை முறியடிப்பீர்கள். இழந்த சலுகைகளை போராடிப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்புகள் வரும்.

கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். ஆனால், வீண் வதந்திகளுக்கு பஞ்சமிருக்காது. அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

அரசியல்வாதிகளே! சபை நாகரிகம் அறிந்து பேசுங்கள். தலைமையுடன் விவாதம் வேண்டாம். கௌரவப் பதவி உண்டு. சகாக்களை நிதானித்து செயல்படச் சொல்லுங்கள்.

விவசாயிகளே! வற்றிய கிணற்றில் நீர் ஊற செலவு செய்து கொஞ்சம் தூர் வார்வீர்கள். வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் கோர்ட், கேஸ் என்று போகாமல் சுமுகமாகப் பேசி தீர்க்கப்பாருங்கள். எண்ணெய் வித்துக்கள், கிழங்கு வகைகளால் லாபமடைவீர்கள். இந்த விளம்பி வருடம் அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும், ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here