#Breaking News ஐபிஎல்! திடீரென கேப்டன் பொறுப்பை தூக்கி எறிந்த இந்திய வீரர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
253

11-வது ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பஞ்சாப்பிடம் நேற்று முன்தினம்  தோற்றது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்னே எடுக்க முடிந்தது. 144 ரன் இலக்கை எடுக்க முடியாமல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோல்வியை தழுவியது. அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது.

டெல்லி அணி சந்தித்த 5-வது தோல்வியாகும். பஞ்சாப்பிடம் ஏற்கனவே 6 விக்கெட்டில் தோற்றுள்ளது. தற்போது மீண்டும் தோற்றுள்ளது. இந்த போட்டி தொடரில் மும்பை, டெல்லி அணிகள் மட்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர், இதனால் கடும் விரக்தியடைந்த காம்பிர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினர்.

புதிய கேப்டனாக இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங்   பயிற்சியில் டெல்லி அணி தடுமாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷாப் பாண்ட் தான் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகின்றனர். இனியாவது டெல்லி வெற்றி பாதைக்கு திரும்புமா என பார்க்கலாம்.

கேப்டனாக ஐபிஎல்லில் ஜொலித்த கேப்டன் காம்பிர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித், டோனி வரிசையில் கோப்பையை அதிக முறை வென்றவர் காம்பிர் தான். கொல்கத்தா அணிக்காக இரண்டுமுறை கோப்பை வென்றுள்ளார். ஆனால் இந்த முறை தடுமாற்றம் கண்டுள்ளார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here