கேப்டன் பதவியிலிருந்து விலகிய கோஹ்லி !! இந்திய அணியின் புதிய கேப்டனாகும் தமிழக வீரர் அஸ்வின் !! வெளிவந்த அதிர்ச்சி காரணங்கள் !!

0
2995

உலகத்தின் பிரபலமான உள்ளூர் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட். இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட தேர்வான முதல் வெளிநாட்டவர் என்ற பெருமை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு. தற்போது இந்தியாவின் பல வீரர்கள் கவுண்டி போட்டியில் விளையாடி வருகிறார்கள். இங்கிலாந்துக்கு ஆகஸ்ட் மாதம் செல்லும் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அங்குள்ள ஆடுகளம், பந்துவீச்சு ஆகியவற்றுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வகையில்கவுண்டி அணியில் விளையாட கேப்டன் கோலி ஒப்பந்தம் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2014-ம்ஆண்டு டெஸ்ட் தொடரி்ல இடம் பெற்றிருந்த கோலி மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுபோன்று வருகின்ற இங்கிலாந்து தொடரில் ஏற்பட்டுவிடக் கூடாது என முன் கூட்டியே தயாராகும் வகையில் கவுண்டி அணியில் விராட் கோலி விளையாடுகிறார்.

இங்கிலாந்து கவுண்டியில் உள்ள சர்ரே அணியுடன் விராட் கோலி அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்துள்ளார். வருகின்ற ஜூன் மாதம் சர்ரே அணியில் விளையாட உள்ளார் கோலி. ஜூன் மாதம் 14 முதல் 18-ம் தேதி வரையில் பெங்களூரில் இந்திய, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் கோலி பங்கேற்மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வாய்ப்புள்ளது. மேலும் யார்க்சையர் அணியில் சட்டீஸ்வர் புஜாராவும், சசெக்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவும் சசெக்ஸ் அணியிலும், வருண் ஆரோன் லீசெஸ்டெர்சையர் அணியிலும் விளையாடி வருகின்றனர். இதனால் டெஸ்டில் இந்தியாவின் முன்னணி வீரர்களான இவர்களும் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே அல்லது அஸ்வின் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. தற்போது ஐபிஎல்லில் கேப்டன்சியில் ரஹானாவை விட அஸ்வின் சிறப்பாக செயல்படுவதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இந்திய ஆப்கான் தொடருக்கு மட்டுமே இந்த மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here