சளியை குணப்படுத்தும் வெற்றிலை ரசம்! இதோ உங்களுக்காக! – செய்முறை ரகசியங்கள் உள்ளே!

0
748

சளியை குணப்படுத்தும் வெற்றிலை ரசம்! இதோ உங்களுக்காக!
தேவையான பொருட்கள் :
வெற்றிலை – 6,
புளி – எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
பழுத்த தக்காளி – 2,

தனியாத்தூள் – 1 டீஸ்பூன்,
மிளகு – சீரகப் பொடி – ஒரு டீஸ்பூன்,
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் (வேகவைத்து நீர் விட்டு கரைக்கவும்),
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
தக்காளி, வெற்றிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை நீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் இதனுடன் மஞ்சள்தூள், உப்பு புளிக்கரைசல், பருப்புத் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

நெய்யில் தனியாத்தூள், மிளகு – சீரகப் பொடியை வறுத்து, கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். உடனடியாக நறுக்கிய வெற்றிலையை போட்டு மூடிவிடவும். 15 நிமிடத்துக்குப் பிறகு பரிமாறவும். சூப்பரான வெற்றிலை ரசம் ரெடி.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here