கல்யாண நிச்சயம் செய்த பெண் வேறு ஒருவருடன் பேசியதால் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம். – கேட்ட காவல் துறைக்கு பேரதிர்ச்சி!

0
1294

ராஜஸ்தான் மாநிலம் துங்காபூர் மாவட்டத்தில் உள்ளா பந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு நிஷாவின் வீட்டிற்கு ஹரிஷ் சென்றார். அப்போது நிஷா போனில் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். யாருடன் பேசி கொண்டிருந்தாய்? என கேட்டதற்கு நிஷா சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹரிஷ் தொலைபேசியை கேட்டுள்ளார். அதற்கு நிஷா மறுத்துள்ளார்.

இதையடுத்து, ஹரிஷ் கோபத்தில் நிஷாவை பயங்கரமாக தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த நிஷாவின் தாயாரையும் ஹரிஷ் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நிஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிஷா உடலில் ஏற்பட்ட உள் காயங்களினால் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஷை கைது செய்தனர். சந்தேகத்தினால் இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here