கடவுள் சத்தியமாக நான் சுடவில்லை – காவலரின் வாக்கு மூலம் வெளியாகியுள்ள ஆடியோ!

0
415

12 க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற காவலர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி அவர்களுக்கு எதிராக கண்டனங்கள் பரவி வரும் நிலையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவலரே பேசுவது போன்ற ஆடியோ ஒன்றை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

தொலை பேசி எண்களுடன் சம்பந்தப்பட்ட சில காவலர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

அப்படி காலவருக்கு இளைஞர் ஒருவர் போன் போட்டு விசாரிக்கும் விதமாக அந்த ஆடியோ அமைந்துள்ளது.

அதில் எனது குடும்பத்தார்களும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். எனது உறவினர்களும் துப்பாக்கி சூட்டில் இறந்துள்ளார்கள். நான் எச்சரிக்கை செய்வதற்காகத்தான் சூட்டேன் ஆனால் உண்மையில் சுட்டது யார் என்ற எங்களுக்கு தெரியாது என அவர் பேசுகின்றார்.

கண்ணீர் புகை வீசப்பட்டது என்பதை அறிந்து போராட்டத்தில் கலந்து கொண்ட எனது குடும்பதாரை மதியம் 1 மணி அளவில் போராட்டக் களத்திலிருந்து அழைத்துக் கொண்ட போய் வீட்டில் விட்டு விட்டு நான் ஸ்பாட்டிற்கு வந்தேன் அப்போது ”வெப்பன் எடுத்துட்டு வாங்க” என எனக்கு கூறினார்கள். சாப்பாட்டு வண்டியில் ஏரி நான் எச்சரிக்கை செய்வதற்காகத்தான் சுட்டேன் என அவர் அந்த உரையாடலில் கூறுகின்றார்.

சரி சார் நீங்க சுடுவில்லை என்கின்றீர்கள் பிறகு எப்படி சார் இத்தன பேரு செத்தாங்க என எதிர்முனையில் இருப்பவர் கேட்க அது யாரு சுட்டாங்கன்னு எங்களுக்கு தெரியாது என அவர் மழுப்புகின்றார்.

”கடவுள் சத்தியமாக நான் சுடவில்லை நான் சுடவும் மாட்டேன்” என்கிறார் அவர். எனது புகைப்படத்தை போட்டு பொதுமக்கள் பரப்புவதால எனது குடும்பத்தினர் என் மீது மிகுந்த வருத்தமாக இருக்கின்றார்கள் குறிப்பாக எனது மனைவி வருத்தமாக இருக்கின்றார் என அவர் கூறுகின்றார்.

மேலும் கலெக்டருடன் மஞ்சல் நிர உடையில் இருப்பவர்கள் என ஒரு புகைப்படம் பரவுகின்றது.அது 2016 ல் எடுக்கப்பட்டது. அது கலெக்டரே இல்லை அவர் எஸ்பி, அவர் பணிமாற்றம் ஆகி 1.5 வருடம் ஆகின்றது என அவர் விளக்கம் அளிக்கின்றார்.

சார் நானும் உங்கள் திட்ட தான் சார் போன் போட்டேன் என்கின்றார் எதிர்முனையில் இருக்கும் நபர். இப்படியே உரையாடல் செல்கின்றது.இந்த உரையாடல் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது…நீங்களே கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்…

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here