நடுரோட்டில் காதலை முறித்துக்கொண்ட காதலன் – காதலனின் நாக்கை கடித்து இழுத்த காதலி! வெளிவந்த வீடியோ!

0
470

காதலில் பிரிவு ஏற்பட்டால், ப்ரேக்-அப் செய்துக் கொண்டதால் நடந்த அசம்பாவிதங்கள் என நமது நாட்டிலேயே பல கொடூரமான சம்பவங்களை கண்டிருக்கிறோம்.காதலின் தோல்வி மற்றும் அதனால் ஏற்படும் வலி என்பது ஒவ்வொருவர் மத்தியிலும் வேறுபடும். இது அவர்களது காதலின் ஆழத்தை, உணர்வை சார்ந்து அமைகிறது. சில காதல் பிரிவுகள் மன ரீதியான வலியை ஏற்படுத்தும், சில காதல் பிரிவுகள் உடல் ரீதியான வலியை ஏற்படுத்தும்.

ஆனால், சீனாவை சேர்ந்த ஒரு பெண் தனது காதலன் காதலை முடித்துக் கொள்ளலாம் என்று கூறியவுடன் விசித்திரமான வகையில் ரியாக்ட் செய்து உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளார்.சீனாவை சேர்ந்த 23வயது இளைஞர் லியு. இவர் தான் தனது காதலி ஜோவு எனும் பெண்ணை பிரேக்-அப் செய்வதாக கூறி, அந்த பெண்ணின் தந்திர செயலால் அபாயமான தண்டனைக்கு ஆளானவர்.

இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் சிலர் கூறுகையில், லியு மற்றும் ஜோவு தங்கள் ப்ரேக்-அப் பற்றி பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஒருவழியாக பிரிவை ஏற்றுக் கொண்ட ஜோவு. தனது காதலனிடம் ஒரு குட்-பை முத்தம் கேட்டிருக்கிறார். அந்த காதலுனும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

பொது இடத்திலேயே அந்த இளம் காதல் ஜோடி லிப் லாக்கில் இணைந்துள்ளனர். ஆனால் முத்தமிட கேட்ட ஜோவு என்ற அந்த பெண் உண்மையில் செய்த காரியம் என்ன தெரியுமா? காதலனின் நாக்கை பிடித்து கடித்துள்ளார்.

மேலும், அந்த ஆணை விலக செய்யாமல் இறுக்க பிடித்து நாக்கை தொடர்ந்து கடித்துள்ளார். காதலன் வலியில் கத்தவே, சுற்றி இருந்தவர்கள் அக்காட்சியினை காணொளியாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் சீனாவின் குயின்ஷன் எனும் பகுதியில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த சில நிமிடத்தில் காவலாளிகள் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை பார்க்க. காவலாளிகள் அந்த பெண்ணை நாக்கை கடிப்பதை நிறுத்தி விலக கூறியுள்ளனர்.ஆனால், அந்த பெண் நாக்கை கடிப்பதை நிறுத்துவதாக இல்லை. வேறு வழியின்று பெண்கள் ஆண்களிடம் இருந்து தற்காத்து கொள்ள பயன்படுத்தும் பெப்பர் ஸ்ப்ரேவை முதன் முறையாக ஒரு பெண்ணிடம் இருந்து ஆணை காப்பாற்ற காவலாளிகள் பயன்படுத்தினார்கள்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here