நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண் எடுத்த தவறான முடிவு!! அதிர்ச்சியில் குடும்பம்

0
357

குடும்­பப் பெண் தவ­றான முடிவு எடுத்து உயி­ரி­ழந்­தார். தமக்­குப் பிள்ளை இல்­லையே என்ற மன உளைச்­ச­லால் அவ்­வாறு முடிவு எடுத்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனைக்­கோட்டை சாவற்­கட்­டைச் சேர்ந்த க.விஜயா (வயது – 35) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.கடந்த 21 ஆம் திகதி அவர் வீட்­டுக் குளி­ய­ல­றை­யில் மண்­ணெண்­ணெய் ஊற்றி தீ மூட்­டி­யுள்­ளார்.

எரி தாங்க முடி­யாது அங்­கி­ருந்து வீட்­டுக்­குள் ஓடிச் செல்ல அவ­ரது தாயார் தீயை அணைத்து உட­ன­டி­யா­கவே யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தார்.எனி­னும் சிகிச்சை பய­ன­ளிக்­காது அவர் நேற்று உயி­ரி­ழந்­தார்.

தமக்­குப் பிள்ளை இல்­லையே என்று அவர் கடு­மை­யாக மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருந்­தார். இந்­தி­யா­வுக்­குச் சென்று தீர்வு பெற­லாம் என்று அவ­ரது கண­வன் கூறி­யி­ருந்த நிலை­யில் இப்­படி நடந்­துள்­ளது. திடீர் றப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை நடத்­தி­னார். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

மேலும் இதையும் படியுங்கள்! இந்த பதிவு உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கலாம் !! பெண்கள் மட்டும் படிக்கவும் !!

வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியில் இந்த இளைய தலைமுறையினரிடம் பெரிய பிரச்சனையாக இருப்பது குழந்தையின்மை.குழந்தையின்மை பிரச்சனைக்கு பலவிதமான் காரணங்கள் உள்ளன.பிரச்சனை ஆணின் புறமும் இருக்கலாம் பெண்ணின் புறமும் இருக்கலாம்.ஆனால் இந்த பிரச்சனையில் பொதுவாக அதிகம் குற்றம் சாட்டப்படுவது பெண்களே.இதுபோன்ற குழந்தையின்மையால் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள் !!

மாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள் தள்ளிப்போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந்தோஷத்தில் பொங்குகிற
உன்னால் நிரம்பவேண்டும்
வா என் கண்மணியே!

உணவை சுமந்தது போதும்
உன்னை சுமக்க வேண்டும்
வா எங்கே இருக்கிறாய்!?
அம்மா என்று யார் அழைத்தாலும் உன் ஞாபகம் தான் வருகிறது!

நாற்பதை நெருங்க நெருங்க நாடி நரம்பெல்லாம் படபடக்கிறது!

உன்னை சுமக்க முடியாத என்னை ஏன் சுமந்தாய் என்று என் தாய்மீது கோபம் வருகிறது!

என் வலியை என் தாய்க்கு நான் தரவில்லை என்று சந்தோஷப்படுகிறேன்!

என் பிள்ளை தானே நீ,
நீயும் நீயில்லாத வலியை
உன் தாய்க்கு தந்துவிடாதே!

இதயத்தை இயங்கச்செய்யும் கடைசி கொஞ்ச ரத்தம் இருக்கமென்றாலும் அதில்கூட கருமுட்டை உருவாக்கித்தான் உனக்காக காத்திருப்பேன்!

எங்கே இருக்கிறாய்
வந்துவிடு என் செல்லமே!!

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here