தயிருடன் இந்த பொருட்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க ஆபத்து நிச்சயம்!

0
1126

தயிர் ஓர் அற்புதமான உணவுப் பொருள். பாலில் இருந்து கிடைக்கும் தயிரால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த தயிரை சாப்பிடுவதால் மட்டுமின்றி, சருமத்திற்கு பயன்படுத்தினாலும் நன்மைகள் கிட்டும். முக்கியமாக தயிரை சரியான நேரத்தில், சரியான பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் தான் உடலினுள் அற்புதங்கள் நிகழும். இக்கட்டுரையில் அந்த தயிரை எப்போது சாப்பிட வேண்டும், எந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது, எதோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பன போன்ற விஷயங்கள் குறித்து காண்போம்.

சிறந்த நேரம்

தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.

சிறந்த பருவம்


தயிரை சாப்பிடக்கூடாத பருவங்கள் என்றால் இலையுதிர் காலம், கோடைக்காலம் மற்றும் வசந்த காலங்களாகும். இதை சாப்பிட ஏற்ற பருவம் என்றால் அது குளிர்காலம் தான். இப்போது தயிரை எதோடு சேர்த்து சாப்பிடுவது நல்லது, எதோடு சாப்பிடக்கூடாது எனக் காண்போம்

தயிர் மற்றும் தேன்


தயிருடன் தேன் சேர்த்து சாப்பிட்டால், வாய்ப்புண் சீக்கிரம் குணமாகும். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் ஏராளமான அளவில் உள்ளது.

தயிர் மற்றும் ஓமம்


தயிருடன் ஓமம் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், வாய் புண் மற்றும் பல் வலி குணமாகும்.

தயிர் மற்றும் கருப்பு உப்பு


இந்த கலவை உடலில் அமில அளவை சீராக பராமரிக்கவும், அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளதால், இதய பிரச்சனைகள் தடுக்கப்படும்.

தயிர் மற்றும் சர்க்கரை


தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். மற்றும் இது சிறுநீரக பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.

தயிர் மற்றும் மிளகு


தயிருடன் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோபயோடிக் பாக்டீரியாக்கள் மற்றும் பெப்ரைன் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

தயிர் மற்றும் ஓட்ஸ்


ஓட்ஸை தயிர் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய கால்சியம், புரோட்டீன் மற்றும் புரோபயோடிக்குகள் கிடைத்து, தசைகள் வலிமையடைய உதவும்.

தயிர் மற்றும் பழங்கள்

பழங்களுடன் தயிர் சேர்த்து சாலட் போன்று தயாரித்து சாப்பிடுவதால், உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.

தயிர் மற்றும் மஞ்சள்


மற்றும் இஞ்சி இந்த கலவையில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

தயிர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

இந்த கலவை மூட்டு வலியைக் குறைக்க உதவும் மற்றும் இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், முதுமையைத் தடுக்கும்.

தயிர் மற்றும் சீரகம்

தயிருடன் சீரகத்தை பொடி செய்து கலந்து சாப்பிட்டால், அது உடல் எடை குறைய உதவும்.

தயிர் மற்றும் நட்ஸ்


தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.

தயிர் மற்றும் சீஸ்

அதேப் போல் தயிருடன் சீஸ் சேர்த்தும் சாப்பிடக்கூடாது.

தயிர் மற்றும் மீன்


மீன் சாப்பிட்டால், அப்போது தயிர் சாதத்தை சாப்பிடாதீர்கள். இதுவும் ஒரு மோசமான கலவையாகும்.

தயிர் மற்றும் வாழைப்பழம்

முக்கியமாக தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here