சன் டிவி எடுத்து வைக்கும் அடுத்த கட்டம் !! வெளிவந்த தகவலால் அதிர்ந்துபோன ரசிகர்கள் !!

0
23222

ஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ளனர்.அந்த அளவிற்கு பல சேனல்கள் வந்துவிட்டது, ஆனால், இன்றும் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் டிவி தான்.

சன் டிவி பார்வையாளர்கள் மத்தியில் தங்களுடைய குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே மாறிவிட்டது.ஒரு நாளில் சன் டிவியை பார்க்காமல் எந்த வீடுமே இருக்காது என்பதுதான் உண்மை.அதற்கேற்றாற்போல் புது படமாகட்டும் அல்லது விறுவிறுப்பான சீரியல் ஆகட்டும் சன் டிவியை அடித்துகொள்ள ஆளே கிடையாது.

சன் டிவி தமிழ் மட்டுமல்லாமல் மேலும் பல்வேறு மொழிகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது.சன் தொலைக்காட்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் ஆட்சி செய்து வருகின்றது.

தற்போது ஒரு படி மேலே சென்று வட இந்தியாவிலும் கால் பதிக்கவுள்ளது, ஆம், விரைவில் சன் தொலைக்காட்சி, மராத்தி, பெங்காலி சேனல் தொடங்கவும் முயற்சி செய்து வருகின்றதாம்.

சன் டிவியின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் அனைவருக்குமே ஆச்சரியம் தான்.ஆனால் இது மற்ற சக போட்டியாளர் சேனல்களுக்கு எந்த அளவுக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிச்சயம் உண்மை.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here