நடிகை விஜயலட்சுமியின் கணவர் பிரபல இயக்குனரா? – வெளிவந்த நடிகையின் திருமண புகைப்படம்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

0
11300

காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற படங்களை இயக்கியவர் அகத்தியன். இவரது மகள் விஜயலட்சுமி, வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விஜயலட்சுமி, உதவி இயக்குநராக பெரரோஸ் கானை கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதலை இருவரும் ரகசியமாக வைத்திருந்தனர். ஒருக்கட்டத்தில் தனது காதலை, தன் வீட்டில் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார் விஜயலட்சுமி. இதனையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பெரோஸ் – விஜயலட்சுமியின் திருமணம் கடந்த ஆண்டு சிறப்பாக சிறப்பாக நடந்தது. இந்து முறைப்படி விஜயலட்சுமி கழுத்தில் தாலி கட்டினார் பெரோஸ். இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

பெரோஸ் ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகனிடம் உதவியாளராக பணியாற்றியவர். இவர் தற்போது ”பண்டிகை” என்ற படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். இதில் கிருஷ்ணா – கயல் ஆனந்தி நடிக்கின்றனர். இப்படத்தை தனது கணவருக்காக தயாரித்து, இதுநாள் வரை நடிகையாக இருந்தவர், இப்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்திருக்கிறார் விஜயலட்சுமி.

தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் விஜயலட்சுமி. கடந்த ஆண்டு வெளிவந்த பண்டிகை படத்தினை தயாரித்துள்ளார் இவர். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார் விஜயலட்சுமி.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here