படப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் !! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர் !!

0
825

கன்னட சினிமாவில் Kanasu Kannu Teredada என்ற படத்தை இயக்கியவர் சந்தோஷ் கடீல்.ஆவணப்பட பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படமானது வெளியானபோது நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் கன்னட சினிமாவில் ஒரு சிறப்பான படமாக அமைந்தது.மேலும் இந்த படம் முழுக்க முழுக்க புதிய முகங்களை வைத்து எடுக்கப்பட்டதாகும்.

இவர் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்துவதற்காக 4 நண்பர்களுடன் இராமி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.இவர்கள் இராமி நீர்வீழ்ச்சியை சென்றடையும்போது நல்ல மழை பெய்துள்ளது.இரவு முழுவதும் பெய்த மழையினால் வழியெங்கும் சேறாகவும் பாறைகள் வழுவழுப்பு தன்மையுடனும் இருந்துள்ளன.

அங்கு அவர் ஒருசில காட்சிகளை படப்பிடிப்பு செய்தபோது மழையில் கால் தவறி நீருக்குள் விழுந்துள்ளார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

ஆனால் அவர் உயிரிழந்துள்ளார், இந்த சம்பவம் நேற்று (மே 30) காலை 8.30 மணியளவில் நடந்துள்ளது.இவரது மரணமானது தற்போதுதான் உறுதி செய்யப்பட்டது.மேலும் இவர் தமிழில் இரண்டு குறும்படங்கள் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த மரணத்திற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சமீபகாலமாகவே திரையுலகில் பல்வேறு மரணங்கள் நிகழ்வது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here