அஜித் செய்த இந்த செயல் பற்றி உங்களுக்கு தெரியுமா?? – மனம் நெகிழ்ந்து போவீர்கள் !!

சினிமா

நடிகர் அஜித்குமார் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.திரையில் நல்லவராக தோன்றுவது போலவே திரைக்கு பின்னும் பல விசயங்களை நல்லபடியாக செய்து வருகிறார்.அவ்வப்போது இவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வலம்வரும்.அஜித் பெரும்பாலும் செய்யும் உதவிகள் மற்றும் நல்ல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை.பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்வதில்லை.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தல அஜித். இவரை பெரும்பாலும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் பிடிக்கும். இவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும்.

தமிழ் சினிமாவில் டிஸ்யூம், காவலன் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பக்ரு. இவர் தற்போது பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார். விருது விழா ஒன்றில் நான் தல அஜித்தை சந்தித்தேன். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆசைப்பட்டேன்.

அஜித்தே எனக்காக கீழே இறங்கி வந்து என்னுடைய போட்டோ எடுத்து கொண்டார். என்னுடைய குடும்ப உறுப்பினர்களை பற்றியும் விசாரித்தார். மிக சிறந்த மனிதர் என கூறியுள்ளார்.