அடக்கொடுமையே!- பேரிச்சம்பழம் சாப்பிட்டாலும் இந்த நோய்கள் வருமா? – என்னென்ன நோய்கள் தெரியுமா? உடனே தெரிந்துகொள்ளுங்கள்!

Health Tips ஆரோக்கியம்

பேரீச்சம்பழம் நம் உடலுக்கு எவ்வளவு நல்லதென்று தெரியும் ஆனால் அது எந்த அளவுக்கு நம் உடலுக்கு மாற்றத்தை தரும் என நாம் படித்திருப்போம் உணர்ந்திருப்போம். ஆனால் அதே அளவிற்கு கெடுதலும் விளைவிக்கிறது. அவைகள் என்னன்னாவென கிழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்ன தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், பேரிச்சம் பழத்தை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். அதிலும் ஒருவர் பேரிச்சம் பழத்தை ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதனால் டைப்-2 சர்க்கரை நோய் வரும் அபாயத்தை உண்டாக்கும். இதுப்போன்று ஏராளமான எதிர்பாராத பக்கவிளைவுகளை பேரிச்சம் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் சந்திக்க நேரிடும்.

இக்கட்டுரையில் ஒருவர் பேரிச்சம் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடாமல் அளவாக சாப்பிடுங்கள்.

பேரிச்சம் பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இது கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்த உணவாக கருதப்படுகிறது. பேரிச்சம் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 103 உள்ளது. சாதாரணமாக பேரிச்சம் பழத்தை ஒன்று சாப்பிடும் போதே, சட்டென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதிலும் ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக பேரிச்சம் பழத்தை சாப்பிடும் போது, அது டைப்-2 சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பேரிச்சம் பழம் மட்டும் ஏன் உடல் எடையைக் குறைக்க உதவுவதில்லை என்பதற்கு சரியான காரணம் ஒன்று உள்ளது. என்ன தான் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருந்தாலும், கலோரிகள் அதிகம் இருந்தால், அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.

1 கிராம் பேரிச்சம் பழத்தில் 2.8 கலோரிகள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், தங்களது டயட்டில் பேரிச்சம் பழத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகள் இதய பிரச்சனை மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டிருக்கும். நார்ச்சத்து என்பது தாவர வகை கார்போஹைட்ரேட், அவை உடலில் செரிமானமாகாது. மாறாக குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து, குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, வயிற்று வலியை உண்டாக்கும்.

பேரிச்சம் பழம் நன்கு பளபளவென்று இருப்பதற்கு, அதன் மேல் சல்பைட் என்னும் கெமிக்கல் பூசப்படுகிறது. இந்த சல்பைட் பேரிச்சம் பழத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஒரு வேளை உங்களுக்கு சல்பைட் சகிப்புத்தன்மை இருந்தால், பேரிச்சம் பழத்தை அதிகமாக சாப்பிடும் போது, அதன் விளைவாக வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதிகளவு ஃபுருக்டோஸ் நிறைந்த உணவுகள் வயிற்றில் வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இத்தகைய ஃபுருக்டோஸ் பேரிச்சம்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே பேரிச்சம் பழத்தை ஒருவர் ஒரே வேளையில் அதிகம் சாப்பிட்டால், அதனால் கடுமையான வாய்வுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும்.

பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த பேரிச்சம் பழத்தை ஒருவர் ஒரே வேளையில் அதிகளவு சாப்பிட்டால், அதனால் கடுமையான வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்பட வேண்டிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அளவாக சாப்பிட்டு நன்மையைப் பெறுங்கள்.

பேரிச்சம் பழத்தில் ஹிஸ்டமைன் என்னும் அலர்ஜியை உண்டாக்கும் பொருள் உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் சாலிசிலேட் என்னும் தாவரங்களில் இருக்கும் ஒரு வகையான கெமிக்கல் உள்ளது. இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியவை. எனவே தான் சிலருக்கு பேரிச்சம்பழம் சாப்பிட்டால், சருமத்தில் அலர்ஜியை சந்திக்க நேரிடுகிறது.

பொதுவாக இனிப்புக்களை அதிகம் சாப்பிட்டால், அது பற்களை சொத்தையாக்கும். பேரிச்சம் பழத்திலும் இனிப்பு அதிகளவு நிறைந்திருப்பதால், அதிகமாக பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், பற்கள் சொத்தையாகும் வாய்ப்புள்ளது. எனவே சொத்தை பற்கள் உள்ளவர்கள் பேரிச்சம்பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது. அப்படியே சாப்பிட நினைத்தால், அளவாக ஒன்று மட்டும் சாப்பிடுங்கள்.

பேரிச்சம் பழம் கடினமானதாக இருப்பதால், எளிதில் செரிமானமாகாது. எனவே இது குழந்தைகளுக்கு நல்லதல்ல. எனவே குழந்தைகள் வளரும் வரை அவர்களுக்கு பேரிச்சம் பழத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் பேரிச்சம் பழத்தை குழந்தைகள் சாப்பிட்டால், அதை விழுங்கும் போது அவர்களது மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே மிகவும் கவனமாக இருங்கள்.

இப்போது கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும். ஆய்வுகளில் கர்ப்ப காலத்தில் பெண்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், குறிப்பாக கடைசி 4 வாரத்தில் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால், அது எளிதில் பிரசவம் நடைபெற உதவுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் பேரிச்சம் பழம் கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு 300-500 கலோரிகள் எடுப்பதே நல்லது. அளவுக்கு அதிகமாக கலோரிகளை எடுத்தால், அதனால் கர்ப்ப காலத்தில் உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிடும். எனவே அளவாக 1-2 சாப்பிட்டு கர்ப்ப காலத்தை சிறப்பானதாக வைத்துக் கொள்ளுங்கள்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.