அடிமுட்டாள் ஆக்கிய பொய்கள் – அடப்பாவிகளா..? எகிப்து பிரமிடு..நியூட்டன் ஆப்பிள் எல்லாம் பொய்யா?

Uncategorized செய்திகள்

சில விஷயங்களை நாம் பிறந்ததில் இருந்து உண்மை என்று நம்பி வந்திருப்போம். ஏன் இங்கே உங்களை விழிபிதுங்கி போக செய்யும்.

சில உண்மைகள் நமது வகுப்பறையில் பயிற்றுவிக்கப்பட்டவையும் கூட… நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்த பிறகே அவர் புவியீர்ப்பு கண்டறிந்தார் என்பதில் துவங்கி, டாம் அன்ட் ஜெர்ரியில், ஜெர்ரி சீஸ் விரும்பி உண்ணும் என்பது வரை நாம் நம்பி ஏமார்ந்த விஷயங்கள் பலவன இருக்கின்றன.

எகிப்துல பிரமிடு அவ்வளவு இல்லையா?

பிரமிடு என்றாலே அனைவரும் மனதிலும் எகிப்து தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், உலகில் அதிகமான பிரமிடுகள் இருக்கும் இடம் எகிப்து கிடையாது. ஆம்! எகிப்தை காட்டிலும் அதிகமான பிரமிடுகள் சூடானில் தான் இருக்கின்றன.

கிட்டத்தட்ட இந்த பகுதியில் 255 பிரமிடுகள் இருக்கின்றன. இது எகிப்துடன் ஒப்பிடும் போது இரட்டிப்பு மடங்கு அதிகம் ஆகும்.

தலையில விழுகல…

நியூட்டன் என்றாலே அவரது மூன்றாம் விதி தான் நினைவிற்கு வரும். அந்தளவிற்கு மிகவும் பரிச்சயம்.

நியூட்டன் அசந்து ஒரு ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த போது அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அந்த கணநொடியில் தான் நியூட்டன் புவியீர்ப்பு குறித்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால், லண்டனின் ராயல் சமூகம் இதை முற்றிலும் மறுத்துள்ளது. நியூட்டன் தலையில் அப்படி எந்தவொரு ஆப்பிளும் விழவில்லை. அவர் மரத்தில் இருந்து ஆப்பிள் பூமியில் விழுவதை கண்டு தான் புவியீர்ப்பு கண்டறிந்தார் என்று ராயல் சமூகம் கூறியுள்ளது.

பென்குயின்!

பென்குயின்களுக்கு கால்கள் மிகவும் குட்டி, அவைகளுக்கு மூட்டு கிடையாது, அதனால் தான் இவற்றின் நடை கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறது என்றும் நாம் கருதுகிறோம்.

ஆனால், பென்குயின்களுக்கு மூட்டு இருக்கிறது. ஆனால், இவற்றின் உடல் வடிவம் காரணமாக மூட்டு வெளிப்படையாக தெரிவதில்லை.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.