அடேங்கப்பா சரியான போட்டி’…சுரேஷை வந்ததும் கலாய்ச்சி , வெறுப்பேத்திய அர்ச்சனா!!

Uncategorized

பிக் பாஸ் 4வது சீசன் 16 போட்டியாளர்களுடன் துவங்கியது. இந்நிலையில் தற்போது 17வது போட்டியாளராக வைல்டு கார்டு என்டிரியாக வந்திருக்கிறார் தொகுப்பாளர் அர்ச்சனா. அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவது இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது.தற்போது சற்றுமுன் வெளிவந்திருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் அர்ச்சனா சுரேஷ் சக்ரவர்த்தியை அசிங்கப்படுத்தி உள்ளது காட்டப்பட்டு இருக்கிறது. வீட்டுக்குள் வந்த உடனேயே சுரேஷை அர்ச்சனா இப்படி டார்கெட் செய்கிறாரே என இதை பார்த்த ரசிகர்களும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.

அனைவர் முன்னிலையில் “எத்தனை பேருக்கு சாரின் (சுரேஷ் சக்கரவர்த்தி) சமையல் பிடிக்கவில்லை” என அர்ச்சனா கேட்கிறார். அதற்கு பதில் கூறிய ரியோ ‘சமையல் மட்டும் தான் பிடிக்கும் அதனால் கைதூக்க முடியல’ என தெரிவித்தார்.

அதன் பின் ‘எவன் அவன்’ என அர்ச்சனா சுரேஷிடம் கேட்கிறார். ‘நீங்கள் சொன்னவனிடம் தான் கேட்க வேண்டும்’ என சுரேஷ் கூறுகிறார். ‘நீங்க கேட்டு சொல்றீங்களா’ என அர்ச்சனா கேட்க, ‘இப்போ அனுப்பினீங்கனா போய்ட்டு கேட்டு வந்துருவேன்’ என சொல்கிறார்.

மேலும் உங்களுக்கு திருஷ்டி பட்டுவிடுகிறது என சொல்லி அவருக்கு சுத்தி போடுகிறார் அர்ச்சனா. ‘நீங்க பல வருஷமா anchor ஆக இருந்திருக்குமே.. என்ன ரியோ’ என க்ரூப் ஆக சேர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தியை கலாய்த்து இருக்கின்றனர்.

‘I was an anchor’ என பதில் சொல்கிறார் சுரேஷ். அதன் பின் அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்கள் நக்கலாக பல விஷயங்கள் பேசுகின்றனர். அதனால் சுரேஷ் சக்ரவர்த்தி கோ ப மாகி அங்கிருந்து செல்கிறார். இது தற்போது வந்திருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.