அட இது நிஜமாகவே இறுதிச்சுற்று நடிகையின் அம்மா தான் தங்கச்சி இல்லை – வெளிவந்த நடிகை ரித்திகா சிங் அம்மாவின் புகைப்படம்! குழப்பத்தில் ரசிகர்கள்!

Uncategorized சினிமா

தமிழில் ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘வணங்காமுடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் ஃபிட்டாகாவும் வைத்துக் கொள்வதில் ஆர்வமுள்ளவர் ரித்திகா. தற்போது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். இதற்காக தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். ஜிம் பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் ரித்திகா. அண்மையில் உடற்பயிற்சி செய்யும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ரித்திகா. அவரது ரசிகர்கள் இதனை வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர்.

ரித்திகா சிங் நடிக்க வருவதற்கு முன் குத்துச் சண்டை வீராங்கணையாக இருந்தவர். சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பின்னர் குத்து சண்டை பயிற்சிக்கு நேரமில்லாமல் போனதால் அதற்குப் பிறகு போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்திவிட்டார்.

ஆனால் இவர் தான் இப்படி என்றால் இவரது அம்மாவும் இவரைப்போலவே உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். கடந்த அன்னையர் தினத்தன்று ஐவரும் இவரது அம்மாவும் சேர்ந்திருப்பது போன்ற புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தார். இதில் இவர்கள் இருவரும் பார்பதற்கு அக்கா தங்கை போலவே உள்ளனர்.

இந்த புகைப்படத்தை பார்த்து புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களோ, சந்தூர் சோப்பு விளம்பரம் நினைவுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் தாய், மகள் போன்று இல்லை அக்கா, தங்கை போன்று இருக்கிறீர்கள் என்று நெட்டிசன்ஸ் கமெண்ட் போட்டுள்ளனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.