அதிரடி நடிகை விஜயசாந்தியா தற்போது இப்படி? – தற்போது வெளிவந்த புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

இப்பொழுதெல்லாம் பிரபல நடிகைகள் தனிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கமாகி வருகிறது, அதுவும் அந்த படங்களும் வெற்றி அடைந்து விடுகிறது. இப்படி 90களிலேயே தனிப்பட்ட கதாநாயகி கதாபாத்திரத்தில் அதிரடி நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் விஜயசாந்தி. விஜயசாந்தியை தமிழ் ரசிகர்கள் யாராலும் எப்பொழுதும் மறக்க முடியாது. 1990களில் பெரும்பாலும் அதிரடி படங்களில் நடித்து பெண் ஜாக்கி சான் என்ற பெயரை எடுத்து பல ஆக்சன் படங்களில் நடித்தார்.

விஜயசாந்தி 24 சூன் 1966 ஆண்டு பிறந்தார் . இவர்  இந்திய திரைப்பட நடிகையாக மட்டும் இல்லாமல்  இந்திய அரசியல்வாதியும் கூட ஆவார். இவர் 2004இல் அரசியலில் சேருவதற்கு முன்னர் 186 திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். 1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்றார். சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை ஐந்து முறையும், ஆந்திர மாநில அரசின் நந்தி விருதினை நான்கு முறையும் வென்றுள்ளார். மேலும் தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.

இவர் 90களில் பல முன்னணி ஹீரோக்கள் இருந்த காலகட்டதிலேயே  தனக்கென ஒரு அதிரடி பாணியில் நடித்து அனைவரிடமும் பெண்  பெண் ஜாக்கி  சான் என்று புகழ் பெற்றவர் . அப்போதெல்லாம் வெறும் கவர்ச்சியாக நடித்தால் மட்டுமே புகழ் அடைய முடியும் என்ற நிலையை மாற்றி சினிமாவில் வெற்றி பெற்றவர் விஜயசாந்தி.

சொல்லப்போனால் இவர்தான் உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார், 90களிலேயே ஒரு படத்திற்கு 1கோடி சம்பளம் வாங்க்கிய முதல் நடிகை இவர் தான். ஸ்டான்ட் காட்சிகளில் ஹீரோக்களுக்கு இணையாக டூப் போடாமல் நடித்து கலக்கியவர்.

இவரது அரசியல் வாழ்க்கை 2004 ஆம் ஆண்டு ஆரபித்தது. இவர் 2004காம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். 200 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும் அரசியல் வாழ்க்கைக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். தொழிலதிபர் ஸ்ரீனிவாஸ் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போதுவரை குழந்தை இல்லை. தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் ஹைதராபாத்திருக்கும் அவ்வபோது சென்று வருகிறார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.