சினிமாவை பொருத்தவரை வாய்ப்பிற்காக நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்பது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய மறுத்ததால் கூண்டாடி ஒழித்ததோடு நடிகைக்கு நடிக்கவே தெரியாது என்ற கெட்டப்பெயரை பரப்பி இருக்கிறார் ஒரு நடிகர்.
பக்கா தமிழ் பேசும் பெண்ணாக அறிமுகமாகி இருந்த நடிகை ஒருவர் வாய்ப்பிற்காக இயக்குனர் ஒருவரை தேடிச்சென்றுள்ளார். இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவோடும் அந்த நடிகை இருந்த நேரத்தில் இயக்குனரின் வாரிசு நடிகர் படத்தில் நடிக்க அறிமுகமாகினார்.
ஆனால் நடிகர் நடிகையின் அழகில் மயங்கி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வைக்க பல முறையில் கேட்டு இருக்கிறார். ஒரு முறை நாசுக்காக சொல்லி வந்த நிலையில் நடிகையை கேரவனுக்கு கூப்பிட்டுள்ளார். பொறுமையாக ஆரம்பித்த நடிகர், போகப்போக டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
நடிகை வெறுத்துப்போய் எதற்கும் மயங்கி அடிபணியாமல் முடியவே முடியாது என்று கூறியிருக்கிறார். இதனால் கடுப்பாகிய நடிகர், இருவரும் நடித்த படத்தில் இருந்து பாதியிலேயே எஸ்கேப்பாகி பழித்தீர்த்துள்ளார்.
ட்ராப் செய்யப்பட்ட அந்த படத்தைவிட்டு விலகியதோடு நடிகைக்கு சுத்தமாக நடிப்பே வரவே இல்லை என்று கதையை கட்டுக்கட்டாக கூறியிருக்கிறார். அதன்பின் அந்த நடிகை தன் நடிப்பு திறமையை காட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து பிரபலமாகி வருகிறார்.
அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்த அந்த நடிகை மீ டூ கலாச்சாரம் வெளியில் வந்த காலக்கட்டத்தில் சோசியல் மீடியாவில் போட்டுக்கொடுத்ததால். சினிமாவில் இருந்து விலகி தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்தும் வருகிறார்.