தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.
அதேசமயம் பாலிவுட், கோலிவுட் படங்களின் முக்கிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்தும் வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பிறகு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்நிலையில் நயன் – விக்கி திருமணம் பல கோடி செலவில் மகாபலிபுரம் ரெசாட்டில் பிரம்மாண்ட செலவில் நடைபெற்றது.
அவர்களின் திருமணத்தின் வீடியோ ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் ரூ.25 கோடி மதிப்பில் வாங்கி வெளியிட ஒப்பந்தம் செய்திருந்தது. திருமணத்திற்கான செலவுகள் உட்பட 25 கோடிக்கும் ஆசைப்பட்டு திருமணத்தை முடித்தார் நயன்.
இந்த வீடியோவை வைத்து விக்னேஷ் சிவன், டாக்குமெண்ட்ரியாக வெளியிட பிளான் போட்டு அதன் ஷூட்டையும் ஆரம்பித்தார். ஆனால் திருமணமாகி 8 மாதங்களாகிய நிலையில் அந்த வீடியோவை இன்னும் வெளியிடவில்லையாம்.
இதற்கு காரணம் கடந்த 23 ஆம் தேதி தான் முழுமையான் ஷூட்டிங் முடிந்துள்ளதாம். அதனால் தான் நெட்பிளிக்ஸ் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார்களாம். போஸ்ட் பிரடொக்ஷன் கூட துவங்காத நிலையில் இன்னும் சிலகாலம் தாமதமாகலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அஜித்தின் ஏகே62 படத்தின் கதை பிடிக்கவில்லை என்று லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை ஒதுக்கியது. இந்த வாய்ப்பு கிடைக்க சிபாரிசு செய்ததே நயன் தாரா என்பதால், கணவருக்காக லைக்கா, அஜித்திடம் கேட்டும் அவர்கள் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இப்படி திருமண வீடியோ விசயத்திலும் சொதப்பியதை போன்று, தான் கொடுத்த வாய்ப்பினையும் தலைக்கனத்தால் தொலைத்துவிட்டாரே என்று சோகத்தில் இருக்கிறாராம் நடிகை நயன்.