உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பால் 1986-ம் ஆண்டு வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இப்படத்தை இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.
இதில் ரேவதி, ரேகா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை இந்த காலகட்டத்திலும் பலராலும் ரசிக்க படுகிறது. புன்னகை மன்னன் படத்தில் ஒரு நடன கலைஞர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும், கஷ்டத்தை குறித்து கூறியிருப்பார்கள்.
இப்படத்தில் கமலும், ரேவதியும் சேர்ந்து நடனமாடும் காட்சியை எடுத்து கொண்டிருக்கும் போது, கமலின் நடனத்திற்கு ரேவதியால் ஈடு கொடுக்க முடியவில்லை.
இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த கலா மாஸ்டரிடம், என்னால் கண்டிப்பாக கமலுக்கு ஈடு கொடுத்து நடனமாட முடியாது என்று சொல்லி அழுந்துள்ளாராம்.
அதன் பின்னர் அவரை சமாதானம் படுத்தி நடனமாட வைத்தார்களாம்.