அபர்ணதி வீட்டில் ஆர்யா? முறைப்படி மாப்பிள்ளையாக சென்ற ஆர்யா! அதிர்ச்சியில் நான்கு பெண்கள்! புகைப்படங்கள் உள்ளே!

சினிமா

நடிகர் ஆர்யா தனது திருமணத்துக்காக பெண் தேடி வருகிறார். அதற்காக ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது போட்டியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது பலரும் வெளியேற்றப்பட்டு வெறும் 5 பெண்கள் மட்டுமே உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 5 பெண்களில் பார்வையாளர்களின் அதிக வரவேற்பை பெற்றவர் அபர்னதி என்றுதான் கூற வேண்டும்.

அபர்னதிக்கும் ஆர்யாவிற்கும் உள்ள பொருத்தம் பற்றி நீங்களே பாருங்கள். அவரின் இயல்பான குணம், இயல்பான பேச்சு, பழகும் விதம் என அனைத்தும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

ஆர்யாவின் வருங்கால மனைவியாக இவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலரின் விருப்பமாக இருக்கின்றது.இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அது புலப்படுகின்றது. அது மட்டும் இன்றி ஆர்யாவிற்காக அபர்னதி அவரின் குணாதிசியங்களையும் மாற்றி கொண்டுள்ளது இறுதி இரண்டு நிகழ்சியிலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 5 பேர் மட்டுமே இறுதியுள்ள நிலையில், போட்டியாளர்களின் வீடுகளுக்கு ஆர்யா சென்றுள்ளார். இதில், அவர் போட்டியாளர் அபர்ணதி வீட்டைதான் முதலில் தெரிவு செய்துள்ளார். இதனால், ஏனைய நான்கு பெண்களும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

அதுமட்டும் இல்லை, ஆர்யா வீட்டில் உள்ளவர்களும் மாப்பிள்ளைக்கு கொடுக்கும் மரியாதை, உபசரிப்புகளை ஆர்யாவிற்கு வழங்கியுள்ளனர். இதேவேளை, ஆர்யா மற்றும் அபர்ணதியின் ஜோடிதான் அதிகம் பார்வையாளர்களினால் ஈர்க்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, ஆர்யாவின் மனம் கவர்ந்த பெண் அபர்ணதியாக இருக்கும் என்பது அனைவரது எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கின்றது. பொருத்திருந்து பார்ப்போம் யாரைதான் ஆர்யா திருமணம் செய்ய போகின்றார் என்று.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.