அம்மாடியோவ்! லீலை மன்னன் “நித்யானந்தாவின் சொத்து மதிப்பு” எவ்வளவு தெரியுமா?

செய்திகள்

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் இவரும் ஒருவராக வலம்வருகிறார்.

இவர்மீது பலமுறை குற்றச்சாட்டுகள் வந்தது. பெண்களுடன் உல்லாசமாக உள்ளார் எனவும் பல வீடியோக்களை வெளியிட்டனர். ஆனாலும் அவரை தேடி அவரது பீடத்திற்கு பக்தர்கள் ஏறாலக்கணக்கில் சென்றுவருகின்றனர்.

பெங்களூரில் உள்ள இவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.இன்றைய நாளில் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர் என வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் இவர் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியானங்கள் பிரபலமாக உள்ளது. இவர், தனது சொற்பொழிவுகளை புத்தமாக வெளியிட்டுள்ளார். இதுவரை, 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மேலும் நித்யானந்தா ஆலயத்தில் எப்படி இணைவதேன்று உங்களுக்கு தெரியுமா?

இந்த ஆசிரமத்தில் இணைவதற்கான செயல்முறைகள் அவர்களது அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ளது. மேலும் இது ஆசிரமம் என்றாலும், சில சுற்றுலா அம்சங்கள் நிறைந்த பல இடங்கள் இதன் அருகாமையில் காணப்படுகின்றன.

வைத்ய சரோவர் ஆனந்த லிங்கம்

21 அடி உயர ஆனந்த லிங்கம் இந்த ஆசிரமத்துக்கு மிக அருகிலேயே உள்ளது. இது ஒரு தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல அமைந்துள்ளது. இதன் நான்கு புறமும் நீரூற்று அமைக்கப்பட்டு சிவலிங்கத்தின் மேல் நீர் விழுவது போல காட்சியளிக்கிறது.

இது நவபாசான சிலை என்று கூறப்படுகிறது. நவபாசானம் என்பது ஒன்பது வகையான மூலிகைகளால் உருவாக்கப்பட்டது என்று பொருள். மேலும் இது 1008 அரிய மூலிகைகளையும் உள்ளடக்கியது என்றும் நம்பப்படுகிறது.

இந்த குளத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கி பிறவி பலனை அடையலாம் என்றும் நம்பப்படுகிறது.

தொட்ட ஆலத மர

கன்னட மொழியில் ‘தொட்ட ஆலத மர’ என்று அழைக்கப்படும் இந்த இராட்சஸ ஆலமரம் 400 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலமரம் பெங்களூரின் கெட்டோஹள்ளி என்ற கிராமப்பகுதியில் 3 ஏக்ரா இடத்தை அடைத்துக்கொண்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இது 2000-ல் நோயினால் பாதிக்கப்பட்டு தற்போது பல்வேறு மரங்கள் போல் தோற்றமளிக்கிறது.

பெங்களூர்வாசிகளுக்கு மிகச் சிறந்த பிக்னிக் ஸ்தலமாக திகழ்ந்து வரும் இந்த ஆலமரம் இருக்கும் இடத்திற்கு பெங்களூர் மெஜெஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்தும், கே.ஆர். மார்க்கெட் பேருந்து நிலையத்திலிருந்தும் நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சுற்றுலாத் துறை இந்த இடத்தில் பயணிகளின் வசதிக்காக ஒரு உணவகமும் ஏற்படுத்தியுள்ளது.

எப்படி செல்லலாம்

பெங்களூவிலிருந்து ஒரு மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலமரம். பெங்களூருவின் அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களில் இதுவும் ஒன்றாகும். அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள் முக்தம்மா கோயில், முக்தி நாக கோயில், முக்காத்தம்மா கோயில், கங்கம்மா கோயில், சனீஸ்வரா கோயில் ஆகியன இதற்கு அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தளங்களாகும். அருள்மிகு நித்யானந்தேஸ்வரா கோயில், பிலாடி இந்த கோயில் நித்யானந்தேஸ்வரா கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இது மைசூரு சாலையில் பிலாடி எனும் இடத்திலேயே அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்பவர்கள் அதிக காஸ்மிக் எனர்ஜியை உணரலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது மனம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவல்ல புனித தலம் என்றும் நம்பப்படுகிறது. இதுவும் நித்யானந்தா ஆசிரமத்துக்கு அருகிலுள்ள கோயில் ஆகும்.

ராமநகரம் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் ராமநகரம் பெங்களூரிலிரிந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் ராமநகர மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கி வருகிறது. இது ஆசிரமத்திலிருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் மற்ற பகுதிகளை போலவே இதுவும் சோழ, மைசூர் மன்னர்களால் ஆளப்பட்ட நகரமே. எனினும் அமிதாப் பச்சன் நடித்த வெற்றிப் படமான ஷோலே இங்கு படம் பிடிக்கப்பட்ட பிறகுதான் ராமநகரம் புகழ் பெறத் ஆரம்பித்தது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.