அருவி பட நடிகையா இது ? – என்ன இப்படி மாடனாக மாறிவிட்டார் – வெளிவந்த புகைப்படம், அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

ஆயிரத்தில் ஒருத்தி என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.. அதென்ன ஐநூறில் ஒருத்தி என்கிறீர்களா..? அவர் வேறு யாருமல்ல கடந்த வருடம்  டிச-15ஆம் தேதி வெளியான  ‘அருவி’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி பாலன் தான்.. இவர் எப்படி ஐநூறில் ஒருத்தியாக மாறினார் என்கிற கதை இந்த படத்தை பார்த்தாலே நமக்கு தெரியும்.

இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார், மேலும் இந்த படம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்து போனது. யார் இந்த நடிகை! யார் இவர! என எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார். மேலும் கடந்த வருடத்திற்கான விருதுகள் பலவற்றையும் இந்த படம் அள்ளியது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விகடன் விருது விழாவில் கூட இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை இவர் தட்டிசென்ற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகை அதிதி பாலன் அருவிக்கு முன்பு  தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அருவி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திருப்பிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும் . தற்போது தமிழில் பல பட வாய்ப்புகள் வந்த போதும் குறிப்பிட்ட ஒரு இயக்குனர் சொன்னால் தான் அந்த படங்களில் நடிப்பேன் என வாய்ப்புகளை தட்டி கழித்து வருகிறார்.

தற்போது அருவி படத்தில் ஸ்கூல் பெண்ணாக பார்த்த அதிதி, மார்டன் அதிதியாக மாறி நிற்கிறார். ஐ.எப் வுமன் பத்திரிக்கைகு மார்டன் பெண்ணாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த மாற்றம் படத்திற்காகவா என கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அட்டைபடதிர்க்காக கூப்பிட்டார்கள் என பதிலளித்தார்.

இதோ அவர் மாடனாக மாறிய புகைப்படம்: 

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.