அருவி பட நாயகி அதிதி பாலனை சோகத்தில் ஆழ்த்திய மரண சம்பவம்! கண்கலங்கி அழுத அதிதி!

Uncategorized சினிமா

ஆயிரத்தில் ஒருத்தி என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்.. அதென்ன ஐநூறில் ஒருத்தி என்கிறீர்களா..? அவர் வேறு யாருமல்ல கடந்த வருடம்  டிச-15ஆம் தேதி வெளியான  ‘அருவி’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி பாலன் தான்.. இவர் எப்படி ஐநூறில் ஒருத்தியாக மாறினார் என்கிற கதை இந்த படத்தை பார்த்தாலே நமக்கு தெரியும்.

இந்த படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார், மேலும் இந்த படம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்து போனது. யார் இந்த நடிகை! யார் இவர! என எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு சிறப்பாக நடித்திருப்பார். மேலும் கடந்த வருடத்திற்கான விருதுகள் பலவற்றையும் இந்த படம் அள்ளியது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விகடன் விருது விழாவில் கூட இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தது, சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை இவர் தட்டிசென்ற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசியவர் தான் கல்லூரியில் படிக்கும் போது நடந்த சம்பவத்தை கூறினார். இதில் அவருக்கு ஒரு சிறுமியை நன்கு தெரியுமாம். ஆதரவற்ற அந்த சிறுமிக்கு அதிதி மற்றும் நண்பர்கள் உதவி செய்துள்ளனர்.

அந்த சிறுமி மீது அதிதிக்கு மிகவும் பிரியமாம். அவள் தன் தம்பியின் படிப்பிற்காக பிச்சை எடுத்து வந்தாராம். ஆனால் அதிதி அந்த சிறுமிக்கு உணவளிப்பது, தேவையானதை செய்வது என ஒரு தோழி போல பழகியுள்ளார்.

சில நாட்களுக்கு பின் அந்த சிறுமியை காணவே இல்லையாம். விசாரிக்கையில் அவளை ஆட்டோவில் மர்ம நபர்கள் கடத்தி பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதை கேட்டு அவர் கண் கலங்கியதோடு அந்த ஆட்டோவை பிடித்தால் எல்லாம் தெரிந்தவிடும் என முயற்சி எடுக்க மற்றவர்கள் உடனே வேண்டாம் மா உன்னை ஏதாவது செய்துவிடுவார்கள் என கூறினார்களாம்.

இதை நினைத்தாலே என அழுகை வருகிறது என கண் கலங்கி விட்டார். அந்த மாதிரியான வெறியர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.