அலறியடித்து ஓடிய பெண்ணை 3 மாதம் காத்திருந்து பலி வாங்கிய பாம்பு! முழு கிராமமும் பதற்றத்தில்! நடந்த உண்மை சம்பவம்!

செய்திகள்

பெண் ஒருவரை கடிக்க முயன்று தப்பி ஓடிய பாம்பு, மூன்று மாதங்கள் காத்திருந்து கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் முழு கிராமத்தையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருபுவனை அடுத்துள்ள கிராமம் கொத்தபுரிநத்தம் கிராமத்தில் 3 மாதங்களுக்கு முன்பு மாரியம்மா என்ற பெண்ணும் அவரின் கணவரும் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளனர். அதற்காக கருங்கற்களை விலைக்கு வாங்கி வீடு கட்டப்போகும் இடத்தில் குவித்து வைத்துள்ளனர்.

இதனை லாரி அருகே நின்றுகொண்டு மாரியம்மாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பாதி கருங்கற்கள் லாரியிலும், பாதி கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், லாரியிலிருந்த கருங்கற்கள் குவியலிலிருந்து ஒரு விஷப்பாம்பு திடீரென மாரியம்மாளை பார்த்து சீறியது.

அலறியடித்து மாரியம்மாள் அங்கிருந்து நகர்ந்து ஓடிவிட்டார். உடனிருந்தவர்கள் அனைவரும் பாம்பை விரட்ட ஆரம்பித்தனர். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் பாம்பை விரட்ட முடியவில்லை. விரட்டிய பாம்பையும் திடீரென காணவில்லை. எங்கேயோ தப்பி ஓடிவிட்டது என்று நினைத்து விட்டுவிட்டார்கள்.

இந்த சம்பவத்தை 3 மாதங்களாக மறந்தும் விட்டார்கள். இந்நிலையில், நேற்று வீடு கட்டும் வேலை தொடங்கியது. ஏற்கனவே குவித்து வைக்கப்பட்ட கருங்கற்களிலிருந்து ஒவ்வொரு கற்களாக மாரியம்மாள் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது மாரியம்மாளை பார்த்து சீறிய அதே பாம்பு இப்போது ஒரு கல்லுக்கடியில் இருந்து வெளியேவந்து அவரை கடித்தது. இதனால் வலி பொறுக்க முடியாமல் மாரியம்மாள் அலறினார்.உடனடியாக திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மாரியம்மாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருபுவனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன் விரட்டியடிக்கப்பட்ட பாம்பு மீண்டும் மாரியம்மாளை கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.