ஆண்களை போல் பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை!!! – எப்போதாவது யோசித்ததுண்டா? இதோ விடை

செய்திகள்

ஆண்களுக்கு உதிர்வதைப் போல பெண்களுக்கு ஏன் முடி உதிர்வதில்லை? என்ற கேள்விகள் அவ்வப்போது எழுகின்றன. இவற்றிற்கு விடை காண்பதற்கு முன்னால் முடி குறித்து நாம் சில தேடல்களைச் செய்யவேண்டியவர்களாகிறோம்.

மனித உடலில் அழகினைக் கொடுக்கும் ஓர் வெளிப்புற உறுப்புத்தான் முடி. இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பெரிய பிரச்சினையாக முடி உதிர்தல் மாறி வருகிறது.

முடி என்பது கரோட்டின் எனும் புரதத்தால் ஆன ஒரு புரத இழையாகும். ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. அதே நேரம் தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்கின்றன. இந்தச் செயற்பாடு ஓர் இயற்கையான தொழிற்பாடாகும்.

முடி வளர்வதை ஒரு தாவர வளர்ச்சிச் செயற்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. மூன்று பருவங்களைக் கொண்டதாகத்தான் முடி வளர்ச்சி இடம்பெறுகின்றது.

அனாஜன் (Anagen)

இது முடி வளரும் பருவமாகும். இந்தப் பருவத்தின்போது, ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள்.

காட்டாஜன் (Catagen)

இது முடி உதிரும் பருவமாகும். 3 தொடக்கம் 7 வருடங்களாக வளர்ந்த முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் 2 வாரங்களுக்கு நீடிக்கும்.

டீலாஜன்’ (Telogen)

இது குழியிலிருந்து முடி ஓய்வெடுக்கும் பருவமாகும். இந்த ஓய்வுக் காலம் 2 முதல் 4 மாதங்கள்வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும்போது உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். இவ்வளவுதான் ஒரு முடியின் வாழ்க்கை வட்டம்.

முடி உதிர்வைத் தூண்டுவதில் ஒரு மனிதனிடமுள்ள மூன்று விடயங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் ஆகியனவே அவை. வயதாகும் போது மனிதருக்கு முடி உதிர்வது இயற்கை. ஏனெனில் மனிதன் வயதாக ஆக செல்கள் இறக்க ஆரம்பிக்கின்றன. அதைவிட பரம்பரை அலகுகளும் முடி உதிர்வைத் தீர்மானிக்கின்றன. மொட்டையுள்ள தந்தை ஒருவரின் பிள்ளைக்கோ பேரனுக்கோ இள வயது மொட்டை வந்துவிடும்.

மூன்றாவது விடயம்தான் டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) எனும் ஓமோன். இது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும். ஆனால் அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். காரணம், இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால், வழுக்கை விழுகிறது.

பெண்களுக்கு ஏன் வழுக்கை விழுவதில்லை?

முப்பது வயதிலேயே வழுக்கை விழ ஆரம்பிக்கும் ஆணின் அதே வயதுப் பருவத்தினையுடைய ஒரு பெண், வயதாகி அறுபது எழுபதுகளை எட்டும்போதுகூட முடி உதிர்வதில்லை. இது ஏன் என்ற கேள்வி பலரிடம் எழலாம்.

உண்மையில் நியாயமான சந்தேகம்தான். இதற்கு டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் எனும் அன்ரோஜன் ஓமோன் தான் காரணம். இது ஆண்களுக்குரிய தனித்துவமான ஒரு ஓமோனாகும். ஆனால் பெண்களிடம் இது அளவாகவே சுரக்கிறது. அதிகமாக சுரப்பதற்கு வழியில்லை. ஆதலால் பெண்களின் முடி உதிராமல் வழுக்கை என்ற பேச்சு தள்ளிப்போகின்றது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.