ஆண் தர்பூசணி, பெண் தர்பூசணி கண்டறிவது எப்படி? இதில் எது சுவையாக இருக்கும்?

Health Tips ஆரோக்கியம்

அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு தர்பூசணி, இதன் பாதியளவு ஒரு வயாகராவிற்கு சமமானது. ஆனால், சில சமயங்களில் இந்த தர்பூசணி சுவையே இல்லாமல் இருக்கும். இனிக்காத தர்பூசணி பழம், உப்பில்லாத உணவை போன்றது. ஆனால் எந்த தர்பூசணி சுவையானதாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள சூப்பர் வழிகள் உள்ளது.

தர்பூசணியில் ஆண், பெண் உள்ளதா?

தர்பூசணியில் ஆண், பெண் இருவகை இருக்கிறது என்பது உண்மை. ஆனால் ஆண் தர்பூசணிகள் நீளமாக இருக்கும். பெண் தர்பூசணிகள் வட்டமாக அல்லது கொழுத்து தடித்து காணப்படும். ஆனால் இதில் பெண் தர்பூசணி தான் மிகவும் இனிப்பாக இருக்கும்.

அளவு

பெரிய தர்பூசணிகள் தேர்வு செய்வது தவறு. பெரிய தர்பூசணிகள் எப்போதும் மிகவும் சுவையாக இருக்காது. சிறியவை தான் கூடுதல் இனிப்பாக இருக்கும்.

வால்

தர்பூசணியின் நுனி பகுதி பச்சையாக இருப்பதை காட்டிலும், காய்ந்து அல்லது உலர்ந்தது போல இருந்தால், அந்த தர்பூசணி பழுத்திருக்கும் என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

தோள்பட்டை

தர்பூசணியில் பிரவுன் நிறத்தில் இருக்கும் பகுதியை கண்டு அறியலாம். தேனீக்கள் அதிகமாக தீண்டி இருந்தால் அந்த பிரவுன் நிறம் அதிகமாக இருக்கும். அதை வைத்து சுவையான தர்பூசணியை தேர்வு செய்யலாம்.

புள்ளிகள்

நிலத்தில் வைத்த இடத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் புள்ளி காண முடியும். வெள்ளையாக இருந்தால் முழுமையாக பழுக்கவில்லை என்றும், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது நன்கு பழுத்துள்ளது என்றும் அர்த்தமாகும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.