ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா? – அட இந்த நடிகர்தானா?

சினிமா

செல்வராகவன் தனக்கென ஒரு பாணியில் படம் எடுப்பவர், இவரின் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெரும். அப்படி செல்வராகவன் எடுத்த மிரட்டலான படம் தான் “ஆயிரத்தில் ஒருவன்”. சில காரணங்களால் அப்போது இந்த படம் ஓடவில்லை.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பார்த்திபன் கதாபாத்திரத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேசிய விருதை தவறவிட்ட கதாபாத்திரம், அப்படியிருக்கையில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகரே வேறு ஒருவர் தானாம்.

அது செல்வராகவன் தம்பி பிரபல நடிகர் தனுஷ் தான் நடிப்பதாக இருந்ததாம், சோழர்களின் இளவரசராக தனுஷை நடிக்க வைக்க செல்வராகவன் முயற்சி செய்ய, ஒரு சில கால்ஷிட் பிரச்சனையால் அதில் தனுஷ் நடிக்க முடியாமல் போனதாம்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரிலீசானபொழுது அந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.படம் வெளியாகி வெகுநாட்கள் கழித்தே படத்திற்கான ஒரு அங்கீகாரம் கிடைத்தது.இதுபோன்று ஒரு படம் வெளியாகும்போது அங்கீகாரம் கிடைக்காமல் சிறிது நாட்கள் கழித்து மக்கள் மத்தியில் பேசப்படுவது இதுதவிர ஒருசில திரைப்படங்களுக்கு நடந்திருக்கிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.