இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்வில் முதன் முதலாக தனது அம்மா புகைப்படத்தை வெளியிட்ட விவேக் – வெளிவந்த புகைப்படம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சினிமா

தமிழ் திரைப்படத்துறையில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். ‘பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’, ‘திருமலை’ போன்ற திரைப்படங்கள் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’ அவர்கள். அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் கடைபிடித்து, தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ எனப் போற்றப்பட்டார்.

நடிகர் விவேக் கடந்த சில நாட்களாகவே நெட்டிசன்களால் பேசப்படும் நபராக மாறிவிட்டார்.  தனது டுவிட்டரில் மாணவர்களுக்காக ஒரு டுவீட்டை வெளியிட்டு இருந்தார். அந்த டுவீட்டில், அன்புக்குரிய மாணவர்கள் மற்றும் குழந்தைகளே! உங்கள் கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

சிறுமிகளே உங்கள் தாயிற்கு சமையலறையில் உதவியாக இருங்கள். சமையலை கற்றுக்கொள்ளுங்கள். சிறுவர்களே உங்கள் தந்தையுடன் அவர் அலுவலகத்திற்கு சென்று எப்படி உங்கள் குடும்பத்திற்காக உழைக்கிறார் என பாருங்கள். உறவு வலுப்படும் எனக் குறிப்பிட்டு இருந்தார். இது மிகப்பெரிய பிரச்சனையாக மாறும் அளவிற்கு விவாதங்கள் நடந்தது. இன் நிலையில் அவரும் அந்த கருத்துக்களுக்கு செவிசாய்க்கவில்லை.

இன் நிலையில் இத்தனை நாளாக சினிமாவில் நடித்து தனது குடும்ப புகைப்படத்தை வெளியிடாத இவர் தற்போது தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இன் நிலையில் வெகு நாட்களாக நடிகர் விவேக்கின் குடும்பத்தை பார்க்காத அவரது ரசிகர்கள் அட இவர்தான் விவேக்கின் அம்மாவா என கூறியுள்ளனர்.

Thanks for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.