தமிழ் சினிமா நடிகைகள் பலரும் தற்போது தனது சிறிய வயது குழந்தை பருவ புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்கள் அந்த வரிசையில் நம்ம பிக் பாஸ் குயின் ஷிவானி நாராயணன் தனது குழந்தை பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்தவர் உலக நாயகன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சினிமா வாய்ப்புகளும் இவரை தேடி வந்தது தற்போது கூட உலகநாயகனின் விக்ரம் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இவர் என்னதான் சின்னத்திரை சினிமா என்று இரண்டு இடத்திலும் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருப்பார் இவர் அதில் வெளியிடும் கிளாமரான புகைப்படங்களை பார்ப்பதற்க்கே ஒரு தனி ரசிகர் பட்டாளம் தவம் கிடக்கும்.





