இந்த உணவை சாப்பிட்டால் இரத்த நாளமே வெடிக்கும் ஆபத்தாம்! நாக்கு ருசியை மட்டும் பார்க்காதீங்க!

Health Tips ஆரோக்கியம்

மக்கள் மத்தியில் கிரில்டு மற்றும் வறுக்கும் இறைச்சி, சிக்கன் மற்றும் மீன் வகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஒருவித வித்தியாசமான சுவையில் இருப்பதால் அவற்றை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அவற்றை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் என்ற எச்சரிக்கை தகவலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு டி.எச்.சான் பொது நல பள்ளியின் நிபுணர்கள் சமீபத்தில் ஆய்வு நடத்தினார்கள்.

இந்த கல்லூரியில் படிக்கும் 86 ஆயிரம் பெண்களிடமும், சுகாதாரதுறை படிப்பு மேற்கொண்ட 17,104 ஆண்களிடமும் நீண்ட கால ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, அவர்களின் சமையல் முறை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

ஆய்வில் பங்கேற்பதற்கு முன்பு இவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் புற்று நோய் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லை.

ஆய்வு முடிந்த பின்னர் அதில் பங்கேற்றவர்களில் கிரில்டு மற்றும் வறுத்த இறைச்சி வகைகள், சிக்கன் மற்றும் மீன் சாப்பிட்டவர்களில் 37,123 பேருக்கு உயர் ரத்த அழுத்த நோய் பாதித்து இருந்தது. இத்தகவல் அமெரிக்க இருதய கழகத்தின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இறைச்சி, சிக்கன் மற்றும் மீன்களை அதிக அளவு வெப்பத்தில் சமைக்கும் போது அவற்றில் உள்ள இன்சுலின் அளவு அழற்றி, வி‌ஷத்தன்மை போன்றவை அதிகரிக்கிறது.

அவை ரத்தக் குழாய்களின் உள் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு இருதய நோய்கள் உருவாகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.