இந்த ஒரு பொருளை சமையலில் சேர்த்து பாருங்கள் – குடும்பத்தில் யாருக்கும் நோய் தொல்லை வர வாய்ப்பே இல்லை

Health Tips ஆரோக்கியம்

மிளகு ஆயுர்வேத மருத்துவத்தில் பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள் தான், இதற்கு தனித்துவமான சுவையைத் தருகிறது.மேலும் மிளகில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, ஜிஙக், குரோமியம், வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற பல்வேறு சத்துக்களும் அடங்கியுள்ளன.

உங்களுக்கு ஒருவர் மிளகுத் தூளை அன்றாட சமையலில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு மிளகுத் தூளின் சில முக்கியமான ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும்


மிளகில் உள்ள பெப்பரைன், வைட்டமின் ஏ, சி, செலினியம், பீட்டா-கரோட்டீன் போன்றவற்றை உறிஞ்ச உதவும். மேலும் பெப்பரைன் குடலில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகளின் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, ஊட்டச்சத்து பொருட்களை வளர்சிதை மாற்றம் செய்ய உதவுகிறது.மேலும் இது செல்களில் இருந்து பொருட்கள் வெளியேறுவதைத் தடுக்கும் மற்றும் குடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கும்

செரிமானம் மேம்படும்


மிளகு சுவை மொட்டுக்களைத் தூண்டிவிடுவதோடு, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை அதிகரித்து, முறையான செரிமானத்திற்கு உதவும்.பெரும்பாலான செரிமான பிரச்சனைகள் ஹைட்ரோகுளோரிக் அமில குறைபாட்டினால் அல்லது அதிகப்படியான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் வருபவைகளாகும்.

மிளகு செரிமானம் சிறப்பாக நடைபெறச் செய்வதால், வயிற்று வலி, வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், குடல் நோய்களை சரிசெய்ய உதவும்.

பசியைத் தூண்டும்

மிளகு உணவின் சுவையை மேம்படுத்துவது மற்றும் செரிமானத்தை சீராக்குவது மட்டுமின்றி, பசியின்மையை சரிசெய்யும் உதவுகிறது.உங்களுக்கு பசி உணர்வே இருப்பதில்லையா? அப்படியனால் 1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுங்கள். இப்படி தினமும் உட்கொண்டு வந்தால், உங்களுக்கு இருந்த பசியின்மை பிரச்சனை நீங்கும்.

நெஞ்சு சளி நீங்கும்

மிளகு மூக்கடைப்பு மற்றும் நெஞ்சு சளியை இளகச் செய்ய உதவும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், சளி மற்றும் இருமல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து தினமும் 2-3 வேளை குடித்து வர, சுவாச மண்டலம் சுத்தமாகும்.

இல்லாவிட்டால் சுடுநீரில் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து ஆவி பிடிப்பதன் மூலம், சுவாச பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.சைனஸ் சுரப்பியை சுத்தம் செய்ய வேண்டுமானால், நல்லெண்ணெயில் மிளகுத் தூள் சேர்த்து, அதனை உள்ளிழுங்கள். இதனால் தும்மல் வரக்கூடும். ஆனால் சைனஸ் சுரப்பி சுத்தமாகிவிடும்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.