இந்த நடிகை தற்போது இந்த தொழிலை செய்கிறாரா? – வெளிவந்த புகைப்படம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Uncategorized சினிமா

2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தாமிரபரணி . இத் திரைப்படத்தினை ஹரி இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரமாக விஷால், பானு, பிரபு, நதியா மற்றும் நாசர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சனவரி 27ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த படம் அந்த கால இளசுகளிடையே சக்கை போடு போட்டது. மேலும் இந்த படம் நடிகர் விஷாலுக்கு பெரிய பெயரை வாங்கி கொடுத்தது மட்டுமல்லாது அவரை அடுத்த கட்ட கதாநாயனாக வளர உதவி செய்தது .

இந்த படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானவர் நடிகை பானு, இவர் 1991ஆம் ஆண்டு கேரளாவின் கொளஞ்சேரி என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய அப்பா பெயர் ஜார்ஜ், அம்மா பெயர் சாலி. ஒருகாலத்தில் நடிகை நயன்தாரவிற்கு இணையாக போற்றப்பட்டவர் இந்த பானு. இவர் சிறு வயதில் இருந்தே திரைத்துரையில் இருக்கிறார்.

இவர் பள்ளி படிக்கும் போதே சினிமா துறையின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பவராக இருந்தார். இவர் தனது 12 வயதிலேயே மலையாள சீரியல் ஒன்றில் நடித்துள்ளார்.அதன்பின்னர் தன்னுடைய 14 வயதில் அச்சனுரங்காத வீடு என்னும் மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் பானு. இவருக்கு முக்தா என்னும் ஒரு பெயரும் உண்டு.

அதன் பின்னர் முழு நேர நடிகையாக தன்னை மாற்றிக்கொண்டார். இவர் தென்னிந்திய மொழிகளில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  தமிழில் 2007ஆம் ஆண்டு தன் 16 வயதில் தாமிரபரணி படத்தில் நடித்தார். இதிலிருந்து இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது.

பின்னர் தமிழில் பிரபல நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்தார் .பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்த பானு, தனது 24வயதில் ரிங்க்கு டோமி என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு கியாரா என்னும் பெண் குழந்தை பிறந்தது.

திருமணதிற்கு பிறகு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காததால் முழுவதுமாக கவனத்தை குடும்ப நலனில் செலுத்தினார். அது மட்டுமில்லாமல் Muktha Facial Care என்ற பெயரில் அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் மேக்கப் போடும் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவரின் இந்த புது முயற்சியை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.