தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுடன் ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பின் இருவரும் ஜோடியாக பல படங்களில் நடித்த போது காதலித்து கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் 4 வருட திருமணவாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதாவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது. இருவரும் இணைந்து அவுட்டிங் சென்ற புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. ஆனால் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா, மஜிலி படத்தில் ஒன்றாக நடித்த 25 வயதான நடிகை திவ்யன்ஷா கவுஷிக்கை காதலித்து வருவதாகவும் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
அதற்கு நடிகை திவ்யன்ஷா, நாக சைதன்யா மீது கிரஷ் இருப்பதாகவும் ஆனால் இருவரும் டேட்டிங் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அப்படியென்றால் வாய்ப்பு கிடைத்தால் டேட்டிங் செல்வீர்களா என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். திவ்யன்ஷா கவுஷிக் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியாகவுள்ள மைக்கேல் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.