தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்.தமிழில் டாப் 5 நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் விஜய் எப்படியும் இருப்பார் அந்த அளவிற்கு முக்கியமான ஒரு தமிழ் நடிகராக விஜய் இருக்கிறார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.வாரிசு மற்றும் துணிவுக்கு இடையான போட்டியில் வாரிசு வெற்றிபெற்றதாக மக்கள் கூறுகிறார்கள்.

இளைய தளபதி விஜயின் வீடு நீலாங்கரையில் உள்ளது.குடும்பத்துடன் அங்கு தங்கியுள்ளார் விஜய்.விஜயின் வீடு பார்ப்பதற்கே அரண்மனை போல் இருக்கும்.

இந்தநிலையில் விஜய் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டை 35 கோடி கொடுத்து நடிகை திரிஷா வாங்கியுள்ளாராம்.இதற்கு முன்னரே நடிகர் அஜித் வீட்டின் அருகில் உள்ள இடத்தை 5 கோடி போட்டு வாங்கியதாக தகவல்கள் வந்தது.

தற்போது இப்படி ஒரு தகவல் வந்திருப்பது ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Spyder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *