இயக்குனர், நடிகர், நடன கலைஞர் என பல முகங்களை தமிழ் சினிமாவில் கொண்டவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார் .
ரொம்ப காலமாக டான்ஸ் மாஸ்டராக இருந்த லாரன்ஸ் பிறகு படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.2002 -ம் ஆண்டு “அற்புதம்” என்கிற தமிழ் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து “பாண்டி, ராஜாதி ராஜா” போன்ற படங்களில் லாரன்ஸ் நடித்தார் என்றாலும் அவருக்கு திரைத்துறையில் முக்கியமான படமாக அமைந்தது “இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்” தான்.
அதனை எல்லாம் தொடர்ந்து தற்போது வாய்ப்புகளை பெற துவங்கினார் லாரன்ஸ்.இவை இல்லாமல் 10-க்கும் அதிகமான படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் இயக்கும் படங்களில் இவரே கதாநாயகனாக நடித்துவிடுவார் என்பது பலரும் அறிந்ததே…
இவர் தமிழ் இல்லாமல் தெலுங்கு சினிமாவில் அதிக படங்கள் இயக்கியுள்ளார். நேற்று மகளிர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக லாரன்ஸ் ஒரு விஷயத்தை செய்துள்ளார்.ஏற்கனவே 2019-ம் ஆண்டு மகளிர் தினத்தின்போது தனது தாயை சிறப்பிக்கும் விதமாக பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார் .
தற்போது நேற்று அவரது அம்மா மற்றும் அவருக்காக கட்டியிருக்கும் கோவில் புகைப்படங்களை பதிவிட்ட லாரன்ஸ், எனது அம்மாவின் கோவிலை அனைத்து பெண்களுக்கும் அர்பணிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.