கணவரை பிரிந்த பெண்ணை கர்பமாக்கிய வாலிபர்… பிறகு நடந்த விபரீதம்!!! வாலிபருக்கு பெண் கொடுத்த ஷாக்!!!

Uncategorized

கணவரை விட்டு பிரிந்த பெண்ணுடன் பழகி அவரை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை அடுத்த கலங்கல் ஏரி பகுதியில் வசிப்பவர் புவனேஸ்வரி(28). இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், தனியாக வசித்து வந்த புவனேஸ்வரிக்கு அதாஉல்லா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். புவனேஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அதாஉல்லா அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதில், புவனேஸ்வரி கர்ப்பமானார். ஆனால், உன்னை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால், கருவைக் கலைத்து விடு என அதாஉல்லா கூற அவரை நம்பி கருவை புவனேஸ்வரி கலைத்துவிட்டார்.

அதன் பின் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி புவனேஸ்வரி கேட்டபோது, அதாஉல்லா அதற்கு மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார். எனவே, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.