கண்ணாடி சிறையில் அடைக்கப்பட்ட ஷிவானி ஜித்தன் ரமேஷ் !! வைரலாகும் ப்ரமோ வீடியோ!!

பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. ஆரம்பத்தில் அனிதா மற்றும் சுரேஷ் பிரச்சனையை மட்டும் அரைத்து கொண்டு இருந்த பிக் மட்டும் தற்போது தான் போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் நாரதர் வேலையை துவங்கி இருக்கிறார். அதுவும் Eviction Free Pass டாஸ்க்கின் போது சுரேஷ், போட்டியாளர்களை பற்றி பேசியதை அப்படியே அகம் டிவியில் போட்டு காண்பித்து சிண்டு முடிந்துவிட்டார். இதனால் சுரேஷுக்கு மற்ற சில போட்டியாளர்களுக்கு கொஞ்சம் வாக்கு வாதம் துவங்கியது.