90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு . மகாராஷ்டிராவில் பிறந்த இவர் பாலிவுட் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தார்.
இவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய் காந்த், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக குஷ்பு விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் படத்தின் நீளம் காரணமாக அவர் நடித்த காட்சிகளை படக்குழுவினர் நீக்கிவிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் குஷ்பு, காலில் கட்டு போட்டப்படி ஒரு போட்டோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் ,”உங்களின் அன்றாட வாழ்வை சீர்குலைத்து ஒரு வித்தியாசமான விபத்து ஏற்பட்டால், ஒருவர் என்ன செய்வார்? எனக்கு மற்றவர்களை பற்றி தெரியாது. ஆனால் நான் என்னுடைய குறிக்கோள் முடியும் வரை என் பயணத்தை தொடருவேன்” என்று கூறியுள்ளார்.
When a freak accident lands you up in pain & braces, disrupting your daily routine, what does one do??
Not sure about others, my journey has to continue. Stop not, till you achieve! ❤️#coimbatore to #NewDelhi to #Hyderabad to #Dubai#kneeinjury #ligamenttear #painkillers pic.twitter.com/zwCCdmMxE4— KhushbuSundar (@khushsundar) January 27, 2023