காவி வேஷ்டியில் கல்லூரி மாணவியை பெண் பார்க்க சென்ற விஜயகாந்த் – [பின் நடந்தது தான் பெரும் கூத்து! சுவாரசிய காதல் கதை!

சினிமா

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துடன் திருமணம் நடந்தது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் பிரேமலதா. அவர் கூறியதாவது, கல்லூரி படித்து முடித்தவுடன் திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலை எனக்கு, எங்களுடையை திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

முதல் முறையாக பெண் பார்க்கும் படலத்தில் தான் அவரை சந்தித்தேன், அவர்கள் வீட்டில் உள்ள குடும்பத்து உறுப்பினர்கள் என்னை பார்த்து சம்மதம் தெரிவித்துவிட்டனர்.

றுதியாக என்னை பார்க்க கேப்டன் வந்தார், ஒரு பெரிய ஹீரோ எங்கள் வீட்டுக்கு வருவதால் அவரை எவ்வாறு வரவேற்பது என்பதில் எனது அம்மா மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தார்.

சபரிமலைக்கு மாலை போட்டிருந்த கேப்டன், காவி வேஷ்டியில் காரில் இருந்து இறங்கிவந்தார், அவரின் எளிமையை பாத்து எனது அம்மா பிரமித்துபோனார்.எங்கள் வீட்டிற்கு வந்த 5 நொடியில் தனது மரியாதையான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிட்டார், இதன்பின்னர் எங்கள் திருமணம் மதுரையில் நடைபெற்றது.

அவருக்கு அப்போது இரவு பகலாக படப்பிடிப்புகள் இருந்ததால், அதிகமாக வெளியில் எங்கும் செல்லவில்லை.நாங்கள் தேனிலவுக்கு ஊட்டிக்கு சென்றோம். அதுவும் அங்கு படப்பிடிப்பு நடைபெற்றதால், அவருடன் அங்கு நானும் சென்றேன், அதுதான் எங்களது தேனிலவு கூட.

உழவன் மகன் திரைப்படம் பார்த்தபின்னர் தான் அவரது தீவிர ரசிகையாக மாறினேன். மேலும் அவருக்கு அதிகமான பெண் ரசிகைகள் இருந்தார்கள், ஒரு நாளைக்கு அவருக்கு 10 முதல் 1,000 ஆயிரம் வரையிலான கடிதங்கள் வரும்.

அவை அனைத்தையும் நான் படித்து பார்த்தேன், அண்ணா என்றே அதில் எழுதியிருப்பார்கள், ஆனால் ஒருசிலர் மட்டும், நீங்கள் ஏன் திருமணம் செய்துகொண்டீர்கள் என ஜாலியாக கேட்டிருப்பார்கள் என தங்களது திருமண வாழ்க்கை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் பிரேமலதா.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.