தமிழ் சினிமாவில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது “சந்திரமுகி”. இந்த திரைப்படத்தில் “பொம்மி” என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை “பிரகர்ஷிதா”.
இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி” திரைப்படம் மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான மணிசித்திரதாஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் “அத்திந்தோம் தின்திந்தோம் ” என்ற பாடல் நல்ல வரவேற்பு பெற்றது. இப்பாடலில் ரஜினியுடன் சேர்ந்து “பொம்மி” என்ற குழந்தை கதாபாத்திரம் உடன் சேர்ந்து நடனம் ஆடி அசத்தி இருப்பர் சூப்பர் ஸ்டார் .
அப்படி பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஏற்கனவே வேலன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் சற்று வளர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இதனுடைய கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் பிரகர்ஷிதா-வுக்கு ஒரு குழந்தையம் உள்ளது .
இதனிடையே தற்போது அவர் தனது குடும்பம் மற்றும் குழந்தையுடன் ஒத்துக் கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.